குளோரின் கசிந்து 34 பேருக்கு பாதிப்பு| Dinamalar

டேராடூன் : உத்தரகண்டில், குளோரின் ‘காஸ்’ சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் போலீஸ் டி.எஸ்.பி., தீயணைப்பு வீரர்கள் உட்பட 34 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.உத்தரகண்டின் உத்தம்சிங் நகர் மாவட்டம் ருத்ராபூரில், பழைய பொருட்கள் சேகரித்து வைக்கும் கிடங்கில் இருந்த குளோரின் சிலிண்டரில் நேற்று கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த மக்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அந்த காஸ் சிலிண்டரை அப்புறப்படுத்தி, அருகில் இருந்த … Read more

இடைக்கால பட்ஜெட்: இலங்கை அதிபர் தாக்கல்| Dinamalar

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே.நம் அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை, நிதி அமைச்சர் பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் … Read more

Cobra Twitter Review: ஒன்னு இல்லை ரெண்டு ராஜநாகம்.. எப்படி இருக்கு சியான் விக்ரமின் கோப்ரா!

சென்னை: டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் ஒரு பிரில்லியன்ட்டான இயக்குநர் என்பதை கோப்ரா படத்தின் மூலமும் நிரூபித்துள்ளார். கணக்கை வைத்து சுடோக்கோ போடுவது போல மூளையை கசக்கி ஒரு திரைக்கதையை உருவாக்கி அதில் நடிக்க சியான் விக்ரமை தேர்வு செய்த இடத்திலேயே அவர் பாஸ் ஆகி விட்டார். திரையரங்கில் ரசிகர்களை இரண்டு ராஜநாகங்கள் மிரட்டி வரும் நிலையில், கோப்ரா படம் எப்படி இருக்கு என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ள விமர்சனங்களை இங்கே … Read more

வீடு வாங்க திட்டமா..சென்னை, மும்பையில் என்ன நிலவரம்?

சமீபத்திய காலமாக ரியல் எஸ்டேட் சந்தையானது மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வீடு விற்பனை களைகட்டியுள்ளது எனலாம். மும்பை முனிசிபல் பகுதியில் சொத்து பதிவுகள் இந்த மாதம் 20% அதிகரித்து, 8100 யூனிட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த பதிவு வளர்ச்சியானது 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. எனினும் கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 28% சரிவினைக் கண்டுள்ளது என நைட் பிராங்க் தரவானது சுட்டிக் … Read more

சில இடங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளி மண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 ஓகஸ்ட்31ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஓகஸ்ட்31ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல்நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமானவானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. மேல்,தென்,சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் … Read more

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு… 30 அடி உயரத்துக்கு வான்நோக்கி பீறிட்ட குடிநீர்!

கரூர் மாவட்டம் வழியாக ஓடும் காவிரிஆற்றில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கரூர் மாவட்டம் தவிர, அருகாமையில் உள்ள திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் திருமாநிலையூர் என்ற இடத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு ராட்சத குழாய்கள் மூலம் மின்மோட்டார்கள் கொண்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீணாகிய குடிநீர் இதற்கிடையில், கரூர் மாவட்டம், கடவூர் அருகே … Read more

அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும் அளிக்கட்டும் – ஆளுநர், தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து

சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆளுநர் ஆர்.என்.ரவி: விநாயகர் சதுர்த்தி என்னும் மங்களகரமான நன்னாளில் தமிழக மக்களுக்கு எனது உளம்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஞானம், அதிர்ஷ்டம், வளம் ஆகியவற்றின் உருவகமாக இருக்கும் விநாயகரின் பிறந்தநாளே விநாயகர் சதுர்த்தி. அவரது ஆசியுடனும் முயற்சிகள் மூலமாகவும் தடைகளின்றி இலக்கை அடைவோம். புத்தம் … Read more

ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு – ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை

நியூயார்க்: தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறின. இதைத் தொடர்ந்து தலிபான்கள் ஆட்சி மற்றும் அதிகாரத்தை கைப்பற்றினர். இதற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது கல்விக்காக கஜகஸ்தான் மற்றும் கத்தார் நாட்டுக்கு மாணவிகள் செல்லக்கூடாது என்றும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்ட்டின் … Read more

கள்ளக்குறிச்சி விவகாரம்: பேட்டி கொடுத்த வக்கீல்களுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக ஊடக விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவை மீறி சில மின்னனு மற்றும் சமூக ஊடகங்கள் விசாரணை நடத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மகளின் மரணம் தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று … Read more

கணவரின் ஆபிஸுக்கு சென்று திட்டுவது கொடுமைப்படுத்துவதற்கு சமம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் அரசு ஊழியராக உள்ளார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ராய்ப்பூரைச் சேர்ந்த 34 வயது கைம்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். சிறிது காலத்திற்கு பிறகு அந்த பெண் மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரை அவமரியாதையுடன் நடத்தியதோடு, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நபர் ராய்ப்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு விண்ணப்பித்திருந்தார். வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களின் அடிப்படையில் அந்த பெண்ணின் … Read more