பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

சார்பட்டா பரம்பரை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை தொடர்ந்து ரஞ்சித் ஒரு காதல் கதையை இயக்குகிறார் என்ற தகவல் வெளிவந்ததில் இருந்து இப்படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இதற்கு முன்னால் பா ரஞ்சித் தனது முதல் படமான அட்டகத்தியை முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுத்திருந்தார். அதன் பிறகு மெட்ராஸ், காலா, கபாலி போன்ற படங்களில் சமூகப் பிரச்சனையை முன்னிறுத்தி எடுத்திருந்தார்.  மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் ஜெயராமன் … Read more

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார்

சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மைக்கேல் கோர்பச்சேவ் காலமானார். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92. ஸ்டாலினின் இரும்புத் திரைகளை நீக்கியதாக புகழ் பெற்றவர் கோர்பச்சேவ். சோவியத்தின் கடைசி தலைவர் என்றும் அழைக்கப்படுகிறார். 1985 முதல் 91 வரை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த அவர் தமது 1990 முதல் 91 வரையிலான ஆட்சிக் காலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகம் செய்து ரஷ்யாவை புதிய பாதையில் … Read more

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணை – டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவு

6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை உள்ள குற்றங்களுக்கு தடயவியல் விசாரணையை கட்டாயமாக்க டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லி காவல்துறையின் தலைமையகத்திற்கு நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்திய அமித்ஷா தண்டனையை அதிகரிக்கவும், குற்றவியல் நீதி அமைப்பை தடய அறிவியல் விசாரணையுடன் ஒருங்கிணைக்கவும் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்தக் கூட்டத்தின்போது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 உச்சிமாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அமித்ஷா விவாதித்தார். Source link

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 57 கி. மீ தொலைவில் உள்ள திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் காயாமொழி என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. முற்காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் பெரிய கொடிமரம் பின்னம் அடைந்ததால், அதனை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. கொடிமரம் நிறுவத் தேவையான மரத்தை வெட்டி எடுத்து வர திருச்செந்தூரில் இருந்து ஒரு குழுவினர் ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் … Read more

முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு புதுச்சேரியில் விவசாய கடன் ரூ.13 கோடி தள்ளுபடி

புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாய கடன் ரூ.13 கோடியை தள்ளுபடி செய்வதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் எம்எல்ஏக்களின் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்து பேசியதாவது: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களுக்கு மாத ஊதியம் ரூ.10 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12 வழங்கப்படும். கட்டிட நல வாரிய தொழிலாளர்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.7,000ல் இருந்து ரூ.15,000 ஆகவும், மகப்பேறு உதவித்தொகை ரூ.5,000ல் … Read more

ஆர்டெமிஸ் ராக்கெட்டை வரும் சனிக்கிழமை நிலவுக்கு ஏவ நாசா திட்டம்

ஆர்டெமிஸ் ராக்கெட்டை வரும் சனிக்கிழமை ஏவ உள்ளதாக நாசா அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 29ம் தேதி ராக்கெட்டை நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில் எஞ்சின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்முவில் காங்கிரசார் கூண்டோடு ராஜினாமா 64 பேர் விலகினர்

ஜம்மு: ஜம்முவில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவித்து 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த வெள்ளியன்று கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். புதிய கட்சியை தொடங்க உள்ளதாக இவர் அறிவித்துள்ளார். இந்நிலையில்  காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஜம்முவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். ஜம்முவில் 64 காங்கிரஸ் மூத்த தலைவர்கள் … Read more

விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு காய்கறி சந்தையில் அருகம்புல், பூக்கள் அமோக விற்பனை!

விநாயகர்சதுர்த்தி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறி, பழங்களின் விலையில் பெரிய மாற்றம் இல்லாதநிலையில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் 25-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. இதில் கரும்பு வாழைக்கன்று, விளாம்பழம், அருகம்புல், எருக்கம்பூ, கம்பு, சோளம், மாவிலை தோரணங்கள், மலர் மற்றும் பழ வகைகள் விற்பனை வேகமெடுத்துள்ளது. கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழங்கள் வரத்து போதுமான அளவில் … Read more

பாபர் மசூதி இடிப்பு வழக்கு முடித்து வைப்பு| Dinamalar

புதுடில்லி : உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணை வந்தது.அப்போது அமர்வு உத்தரவிட்டதாவது:உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை தாக்கல் செய்தவர், 2010ல் உயிரிழந்து விட்டார்.இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய … Read more

ஈராக் வன்முறையில் பலி 30 ஆக உயர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாக்தாத் : ஈராக்கில் ஷியா பிரிவினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் பொதுத் தேர்தல் நடந்தது. இதில், ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்- சதரின் கட்சி 73 இடங்களை கைப்பற்றியது.ஆனால், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், இப்போது வரை அங்கு புதிய அரசு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அல் சதர் அறிவித்தார். … Read more