கோப்ரா படம் பார்க்க ஆட்டோவில் வந்த சியான் விக்ரம்.. கீழே விழுந்த முதியவரை தூக்கிவிட்ட மனசு இருக்கே!

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று காலை சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது. சியான் விக்ரமுக்கு ரசிகர்கள் இல்லைன்னு யாருப்பா சொன்னது என வியக்க வைக்கும் அளவுக்கு ரசிகர்கள் FDFS காட்சியை முன்னிட்டு தியேட்டரில் பட்டாசுகளை வெடித்து தீபாவளியே கொண்டாடி விட்டனர். காரில் வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால், சைலன்ட்டாக ஆட்டோவில் வந்த சியான் விக்ரமின் மாஸ் என்ட்ரி வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. வெளியானது கோப்ரா இயக்குநர் அஜய் … Read more

செப்டம்,பர் 1 முதல் EMI அதிகரிக்க போகுது.. எந்த வங்கியில்.. யாருடைய பாக்கெட் காலியாக போகுது!

டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினை கருத்தில் கொண்டு மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இது ஒரு புறம் சேமிப்பாளர்களுக்கு நல்ல விஷயம் என்றாலும், மறுபுறம் கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கடன் வாங்கியோர் அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். செப்டம்பர் 1 முதல் அமல் அந்த வரிசையில் தற்போது பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கும் … Read more

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர்:ஆப்கானிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று (30) இடம்பெற்றது . இது பி பிரிவின் கீழ் இடம்பெற்ற தொடரின் மூன்றாவது போட்டியாகும். இதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்றிபெற்ற பங்களாதேஷ் அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. … Read more

மலிவான விளம்பரத்திற்காக எங்கள் மீது ஊழல் புகார்: ஐகோர்ட்டில் இ.பி.எஸ் தரப்பு வாதம்

2019 முதல் 2021ஆம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. டெண்டர் பணிகளில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக தமிழக அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் … Read more

இயக்குனர் பாரதிராஜாவின் உடல்நிலையில் ஏற்ப்பட்ட மாற்றம்.! எம்.ஜி.எம். மருத்துவமனை அறிக்கை.!

சமீபத்தில் இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நல குறைவு ஏற்பட்டு சென்னை தி.நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின், மேல் சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு நெஞ்சு சளி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை, பெற்று வருகின்றனர். தற்போது எம்ஜிஎம் மருத்துவமனை அவரது உடல்நிலை குறித்து, அறிக்கை வெளியிட்டு இருக்கின்றது. அந்த அறிக்கையில், “எம்.பாரதிராஜா கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னர், அவரது உடல் நிலையில் … Read more

ஒன் பை டூ

இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.“பொய்யான கருத்து… புதிய கல்விக் கொள்கை இந்தியா வைக் கற்காலத்துக்கு மட்டுமே கொண்டு செல்லும். அனைவருக்கும் கல்வி என்பதே பெரும் போராட்டத்துக்குப் பின்புதான் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை மீண்டும் குருகுலக் கல்விக்குத்தான் அடித்தளம் அமைக்கிறது. அது எங்களுக்குத் தேவையில்லை. முதலில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவருவதற்கான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்… இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரதமருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி, … Read more

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

தமிழகம் முழுவதும் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லை தியாகராஜநகர் விக்ன விநாயகர் திருக்கோயிலில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்இழுத்தனர்  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கண்களை இமைத்து காதுகளை அசைத்து பக்தர்களுக்கு காட்சி தரும் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு மங்கள கெளரி பிரதிஷ்டை பூஜை நடத்தப்பட்டது.  சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 வகையான கொழுக்கட்டைகள் பாரம்பரிய … Read more

சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115; சன்னரகம் ரூ.2,160 – நாளை முதல் கொள்முதல் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் நாளை (செப்.1) முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், காரீப் பருவம் 2002-2003 முதல் மத்திய அரசின் முகவராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செயல்படுகிறது. மேலும், மத்திய அரசின் தர நிர்ணயத்துக்கு உட்பட்டு … Read more

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு – 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு

புதுடெல்லி: கடந்த 2021-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 15.3% அதிகம். இதுகுறித்து தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, 2020-ம் ஆண்டைக் காட்டிலும் 15.3% அதிகம் ஆகும். கரோனா பேரிடர் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்த 2020-ல் 3.71 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானை கட்டமைக்க ரூ.80 ஆயிரம் கோடி தேவை – திட்ட அமைச்சர் அசன் இக்பால் தகவல்

இஸ்லாமாபாத்: மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானை மறுகட்டமைப்பு செய்ய ரூ.80 ஆயிரம் கோடி தேவை என்று அந்நாட்டு திட்ட அமைச்சர் அசன் இக்பால் கூறியுள்ளார். பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்தசில வாரங்களாக பெய்துவரும் கனமழையால் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அந்நாட்டு மக்கள் தொகையில் 15% பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பயிர்கள் மூழ்கியுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் திட்டமிடுதல் துறை … Read more