பயமுறுத்தும் சீனா.. மனிதர்களுக்கு மட்டும் அல்ல மீன்-களுக்குக் கொரோனா டெஸ்ட்..!

நவம்பர் 2020 முதல் கோவிட்-19 தொற்று சீனாவை தாண்டி உலக நாடுகளில் வேகமாகப் பரவத் துவங்கிய போது உலகையே ஸ்தம்பிக்க வைத்தது. இந்தத் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவைப் உண்டாக்கியது என்றால் மிகையில்லை, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பேரழிவை யாரும் பார்த்து இல்லை. கொரோனா தொற்று உலகளவில் முழுமையாக நீக்கப்படாவிட்டாலும் தடுப்பூசிகள் மற்றும் சரியான கவனிப்பு மூலம் பெரிய அளவிலான பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சீனாவில் மனிதர்களைத் தாண்டி மீன், இறால் மற்றும் நண்டு … Read more

அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது நோக்கம் – ஜனாதிபதி தெரிவிப்பு

உலகில் ஏனைய நாடுகள் வெற்றிகளுடன் நாளுக்கு நாள் முன்னோக்கிச் செல்லும் போது, ​​நாம் ஒன்றிணைந்து செயற்படாததால் எமது நாடு பின்னோக்கிச் செல்வதாகவும், அந்த வரலாற்றுத் தவறை திருத்தி நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அவர்கள், பிற்பகல் அனுராதபுரம் சம்புத்த ஜயந்தி மகா விகாரைக்கு சென்று வடமத்திய மாகாண பிரதம சங்கநாயக கலாநிதி … Read more

`அதிர்ஷ்டம் இல்லாதவ’ – உறவுகளின் பேச்சால் தவிடுபொடியாகும் தன்னம்பிக்கை, எப்படி மீட்பேன் என்னை?

எங்கள் வீடு 20 வருடங்களுக்கு முன் மிகவும் பணக்கார குடும்பம். அப்பா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தொழில் செய்து முன்னேறியவர். அக்கா, நான் என்று இரண்டு பெண் பிள்ளைகள். திருமணமாகி ஒரு வருடத்தில் அக்கா பிறக்க, அதை தொடர்ந்த வருடங்களில் அப்பாவுக்கு தொழிலில் புலிப்பாய்ச்சல். Happy Family(Representational image) அக்கா பிறந்து 10 வருடங்கள் கழித்து நான் பிறந்தேன். மகனை எதிர்பார்த்திருந்த நிலையில் மீண்டும் ஒரு மகள் பிறந்ததிலேயே, என் குடும்பத்துக்கு என் மீதான அன்பில் பாரபட்சம் … Read more

கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் திடீர் அனுமதி

மதுரை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி காய்ச்சல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐ பெரியசாமி, அதனைத் தொடர்ந்து ஓய்வில் இல்லாமல் செஸ் ஒலிம்பியாட் போட்டி, அமைச்சரவை கூட்டம், மாவட்டத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வத்தலகுண்டில், அவரது உறவினர் மரணமடைந்ததை தொடர்ந்து துக்க நிகழ்வில் பங்கேற்றார். அங்கு … Read more

விநாயகர் சிலைகளை கரைக்க புதிய வழிமுறைகள்..! – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த புதிய விதிமுறைகள்..!!

வருகின்ற 31 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட விநாயகர் பக்தர்கள் தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. விநாயகர் சிலை தயாரிக்க பயன்படுத்த வேண்டிய பொருட்கள் மற்றும் கரைக்க வேண்டிய விதிமுறைகளும் இதில் விளக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலையை கரைக்க தமிழக அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் அறித்துள்ள விதிமுறைகள் : … Read more

தமிழ்நாட்டில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 94 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 94, செங்கல்பட்டில் 49, திருவள்ளூரில் 19 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 81, திருநெல்வேலி 7, தூத்துக்குடி 6, சேலம் 36, கன்னியாகுமரி 19, திருச்சி 20, விழுப்புரம் 13, ஈரோடு 43, ராணிப்பேட்டை 21, தென்காசி 3, மதுரை 12, திருவண்ணாமலை 10, விருதுநகர் 7, கடலூர் 13, தஞ்சாவூர் 12, திருப்பூர் 22, … Read more

நாகை, காரைக்கால், தூத்துக்குடி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை: நாகை, காரைக்கால், தூத்துக்குடி வஉசி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் ஒடிசா மாநிலம் அருகேயுள்ள  சாகர் தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இந்த  தாழ்வுநிலை மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்கம் மற்றும்  ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்து சென்று வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர பகுதிகளுக்கு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகை … Read more

செப்டம்பர் 3ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம்

சென்னை: செப்டம்பர் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெறும் 30வது தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல்

டெல்லி: இலவசங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் திமுக எழுத்துப் பூர்வமான வாதம் தாக்கல் செய்துள்ளது. இலவச நலத்திட்டங்கள் அனைத்தும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக பங்களித்துள்ளது. 1956ல் காமராஜரால் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று உலகளவில் முன்னோடி திட்டமாக இருக்கிறது; மகளிருக்கு பேருந்தில் இலவச பயணம் என்ற திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இலவசங்களால் நிகழ்ந்தது என்ன? இலவசங்கள் வெறும் ஓட்டரசியல் மட்டும் தானா?

சுதந்திர தினவிழாவில் இலவசங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி பேசியது, நாடெங்கும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு நிதியமைச்சர் பி. டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் , தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பி.டி.ஆர் பேசிய விசயங்கள் தற்போது சமூக ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது. அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இலவசங்கள் குறித்த கேள்விகளுக்கும், அதற்கு பி.டி.ஆரின் கொடுத்த பதில்கள் யாவும் இலவசங்கள் குறித்த விவாதத்தை இந்திய அளவிலும் … Read more