கணவர் மீது சந்தேகம்…அந்தரங்க உறுப்பில் வெண்ணீர் ஊற்றிய பெண்!

கணவர் தன்னிடம் உண்மையாக இல்லை என்று சந்தேகம் கொண்டதால், கணவரின் பிறப்பு உறுப்பில் அவரது மனைவி வெண்ணீர் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, ராணிபேட்டையில் உள்ள கிராமத்தில் தங்கராஜ் (வயது 32) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரம்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருவதாக கூறப்படுகிறது. தங்கராஜ் தனக்கு உண்மையாக … Read more

தமிழக டிஜிபி பெயரில் மோசடி- எச்சரிக்கும் டிஜிபி அலுவலகம் ..!

தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று டிஜிபி அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.   தமிழ்நாட்டில் ஆன்லைன் முறையிலான மோசடி நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில்,  இந்த மோசடியில் பெரும்பாலான மக்கள் தங்களது பணம், சுய விபரங்களை பறிகொடுத்து வருகின்றனர்.  இந்த மோசடியை தடுப்பதற்காக காவல்துறை மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக டிஜிபி பெயரில் பரவும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு … Read more

அதிமுக: பொதுக்குழு வழக்குத் தீர்ப்பு… இபிஎஸ், ஓபிஎஸ் அணியின் அடுத்தகட்ட மூவ் என்ன?!

“அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும்” என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இலைக் கட்சி வட்டாரத்தில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. அதாவது, `எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அப்படியே தொடரும்’ என்பதுதான் இந்தத் தீர்ப்பின் சாரம்சம். இந்தநிலையில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் முகாம்களில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மிகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஜூன் 23-ம் … Read more

கடற்படை, ராணுவத்தில் பணி: விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை: பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படையில் நிரந்தர அதிகாரிகள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில், தொழில்நுட்பப் பிரிவில் 25 இடங்களும், கல்விப் பிரிவில் 5 இடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 12-ம்வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் 70 சதவீத மதிப்பெண்களும், ஆங்கிலப் பாடத்தில் 50 சதவீதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2003ஜுலை 2 மற்றும் 2006 ஜனவரி1-ம் … Read more

வெளிநாட்டவர்கள் விரும்பும் நகரங்கள்: பெங்களூரு 6-வது இடம்

புதுடெல்லி: வெளிநாட்டவர்கள் தொழில் சார்ந்து புலம்பெயர்வதற்கு ஏற்றதாக உருவாகி வரும் உலக நகரங்களின் பட்டியலை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூரு ஆறாவது இடத்தில் உள்ளது. முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் சொகுசு வாழ்க்கைக்கான சூழல் நிலவுவதாலும் பெங்களூரு வெளிநாட்டவர்களுக்கு ஏற்ற நகரமாக உருவாகி வருவதாக புளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது. பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி இருக்கும் அமெரிக்கர் ஒருவர் கூறுகையில், ‘‘என் மனைவி, பிள்ளைகளை அமெரிக்காவில் விட்டுவிட்டு, தொழில் தொடங்க பெங்களூருக்கு வந்துள்ளேன். தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழல் … Read more

கொடுத்த கடன் வந்து சேரவில்லை: நரிக்குறவப் பெண் அஸ்வினி குற்றச்சாட்டு

சென்னை: அரசாங்கம்தானே அன்னதானம் போடுது, உங்க வீட்டுக் கல்யாண சாப்பாடு போடற மாதிரி அடிச்சு விரட்டறீங்க” என கேள்வி எழுப்பி, அனைவரின் கவனத்தையும் பெற்ற நரிக்குறவ பெண்மணி அஸ்வினியின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை முடிவு வரவில்லை. சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து,  மகாபலிபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர் எனப் பெண் வீடியோ வெளியிட்டு இருந்தால், இந்த வீடியோ சமூக வலைதளம் முழுவதும் வைரல் அனைத்துத் தொடர்ந்து. கடந்த வருடம் தீபாவளி … Read more

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் விபரீதம் நடந்துள்ளது.

சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

மயிலாதுறை: சீர்காழி அருகே மீன்பிடித்தபோது கடலில் கட்டுமரம் கவிழ்ந்து அலையில் சிக்கி மீனவர் உயிரிழந்துள்ளார். கட்டுமரம் கவிழ்ந்து உயிரிழந்த மீனவர் சண்முகம் உடல் கொட்டாய் மேடு பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது கேரள அரசு

திருவனந்தபுரம்: கேரளாவில் தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையை போல கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. கேரளா சவாரி’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த இ-டாக்சி சேவை நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.

குடிபோதையில் துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறு: மயானத்தில் ஒருவர் அடித்துக் கொலை

ராஜபாளையம் அருகே சடலத்தை அடக்கம் செய்ய மயானம் வரை உடன் சென்றவர் மயானத்திலேயே சடலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜபாளையம் அருகே உள்ள காக்கிவாடான்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (37). கூலித் தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் சரவணகுமார் மற்றும் சுபலட்சுமி என்ற பள்ளியில் பயிலும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று காளவாசல் பகுதியில் சரவணகுமாரின் உறவினர் ராமசாமி என்பவர் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். துக்கம் விசாரிப்பதற்காக சென்ற சரவண குமாருக்கும் அப் … Read more