ரஷ்யாவுக்கு நாங்க இருக்கோம்.. சீனா-வை ஓரம்கட்டிய இந்தியா..!

2022ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு – 0.6 (மைனஸ்) சதவிகிதமாக உள்ளது. இதுவே மார்ச் காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரம் -1.6 சதவீதமாகச் சரிந்திருந்தது.

ஆனால் இதேவேளையில் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 20.1 சதவீத வளர்ச்சி அடைந்த நிலையில், 2022 ஜூன் காலாண்டில் அமெரிக்கா போல் மைன்ஸ் அளவுக்குச் செல்லாமல் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா மட்டும் வளர்ச்சி அடைய என்ன காரணம் தெரியுமா.. ரஷ்யா தான். இப்படிப்பட்ட ரஷ்யாவை கைவிட முடியுமா..?

இந்தியாவின் பிஎம்ஐ விகிதம் தொடர்ந்து வளர்ச்சி..என்ன காரணம் தெரியுமா?

ரஷ்யா

ரஷ்யா

கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்ததில் இருந்து உக்ரைன் நாட்டை எப்போது தாக்குவது எனக் காத்திருந்த ரஷ்யா பிப்ரவரி மாதம் கடையில் தாக்குதலை துவங்கியது. ரஷ்ய – உக்ரைன் போருக்கு பின்பு பல ரஷ்யாவை காட்டிலும் பல நாடுகள் மோசமான நிலைக்கு என்றது, ஆனால் ரஷ்யாவின் உதவியால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் உள்ளது.

இந்தியா - கச்சா எண்ணெய்

இந்தியா – கச்சா எண்ணெய்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை உலக நாடுகள் தடை செய்ய முடியாத இதேவேளையில் இந்தியாவுக்கு ஸ்பெஷலாக டிஸ்கவுன்ட் விலையில் கச்சா எண்ணெய் கொடுப்பதாக அறிவித்தது ரஷ்யா. சும்மா இருக்குமா இந்தியா போடுறா ஆர்டர் என்பது போல் நீண்ட கால நண்பனாக இருக்கும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்-ஐ வாங்கிக் குவித்தது.

ரஷ்ய எண்ணெய் ESPO
 

ரஷ்ய எண்ணெய் ESPO

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரஷ்யாவில் இருந்து சுமார் 6 எண்ணெய் கப்பலில் ரஷ்ய எண்ணெய்யான ESPO-வை வாங்கியுள்ளது இந்தியா. இதன் மூலம் எப்போது ரஷ்யா உடனான வர்த்தகத்தில் சீனா முன்னோடியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தியா முன்னிலை வகிக்கிறது.

6 கப்பல்

6 கப்பல்

ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கிய பின்பு இந்தியா அதிக ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியது ஆகஸ்ட் மாதம் தான். ஒரு காலத்தில் இந்தியா ரஷ்யாவின் ESPO எண்ணெய் என்றாலே வேண்டாம் எனக் கூறி வந்த நிலையில் ஒரே மாதத்தில் 6 கப்பல்களை வாங்கியுள்ளது என Vortexa நிறுவனத்தின் ஆய்வாளர் Emma Li தெரிவித்துள்ளார்.

இந்தியா - ரஷ்யா

இந்தியா – ரஷ்யா

இந்தியாவுடன் வர்த்தகத்தை அதிகரிக்க ரஷ்யா ஈரான் வழியாக இயங்கும் INSTC வழித்தடத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இதேபோல் ரஷ்யா நிறுவனங்கள் உடனான வர்த்தகத்தை எளிதாக்க ஆர்பிஐ ரூபாய் வாயிலான பணப் பரிமாற்ற முறையை அறிமுகம் செய்துள்ளது. இது இந்தியாவுக்குப் பெரிய அளவில் உதவியது என்றால் மிகையில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India Beats China; India became biggest buyer of Russian oil ESPO

India Beats China in Russian Oil market, India became biggest buyer of Russian oil ESPO. In August India buys nearly 6 vessels of Russian oil ESPO via INSTC shpping lines.

Story first published: Thursday, September 1, 2022, 16:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.