சீட் பெல்ட் அணியாததால் மிஸ்திரி விபத்தில் மரணம்: போலீசார் தகவல்

மும்பை: டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (54). இவர் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் இருந்து மும்பை நோக்கி பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். மாலை 3.15 மணியளவில், பால்கர் மாவட்டத்தில் உள்ள சூர்யா நதி பாலத்தின் மீது வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை டிவைடர் மீது மோதியது. இதில், சைரஸ் மிஸ்திரியும், மற்றொருவரும் அதே இடத்தில் இறந்தனர்.  இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், காரை அதிவேகமாக ஓட்டியதும், மிஸ்திரி சீட்பெல்ட் அணியாததும்தான் இறப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயம் அடைந்தவரும் காரை ஓட்டியவருமான டாக்டர் அனாகிதா பண்டோலே மற்றும் அவரது கணவர் டாரியஸ் பண்டோலே ஆகியோர், மும்பையை சேர்ந்த எச்.என். ரிலையன்ஸ் பவுண்டேஷன் மற்றும் ஆய்வு மைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள இவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இறந்த சைரஸ் மிஸ்திரியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்குகள் நடக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.