கடும் நிதி நெருக்கடி – முடங்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள்


நிதி நெருக்கடி காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன சபைகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதிலும் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான எழுதுபொருட்களை பெற்றுக்கொள்வது, அத்தியாவசிய ஊழியர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவுகளை வழங்குவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக நிறுவனங்களின் தலைவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடும் நிதி நெருக்கடி - முடங்கும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் | Financial Crisis Government Services Affected

இருபதாயிரம் கோடிக்கு மேல்  நிலுவைத் தொகை

அமைச்சுக்களில் புதிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மட்டுமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பல அரசு நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது.

இதற்கிடையில், இரண்டு அரச வங்கிகளில் இருந்தும் நிதி விடுவிக்கப்படாததால், நெல் சந்தைப்படுத்தல் சபையும் நெல் கொள்முதல் செய்வதை நிறுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.