Apple iphone 14 series ஐபோன்களில் பிரச்சனை! அடுத்த வார இறுதிக்குள் சரியாகும்!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 போன் நிறுவனமான Apple அதன் சமீபத்திய அறிமுகங்களான ஐபோன் 14 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகிய போன்களில் உள்ள பிரச்னைகளை அடுத்த வார இறுதிக்குள் சாப்ட்வேர் அப்டேட் மூலம் சரிசெய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த போன்களில் ரியர் செம்மர மூலம் எடுக்கப்படும் வீடியோ அதிகப்படியான அசைவு ஏற்படுவதாக வாடிகையாளர்கள் புகார் தெரிவித்தனர். இதற்காக தனியாக ஒரு அப்டேட் பேட்ச் விரைவில் வெளியிடப்படும் என்றும் அது இந்த வார இறுதிக்குள் வெளியாகும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரு போன்களும் செப்டம்பர் 7 அன்று வெளியிடப்பட்டது. அப்போது அந்த போனை வாங்கிய பலர் இந்த பிரச்சனை குறித்து புகார் தெரிவித்தனர். இதனை சில தனிப்பட்ட செயலி மூலம் பயன்படுத்தும்போது இந்த பிரச்சனை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.

iphone 14 Sale: இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ், iWatch சீரிஸ் 8, SE விற்பனை ஆரம்பமானது!

தனியாக ஆப்பிள் கேமரா மூலம் எடுக்கப்படும் வீடியோ எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வேலை செய்கிறது. ஆனால் Facebook, TikTok, Snapchat, Instagram போன்ற செயலிகளை பயன்படுத்தும்போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புதிய அப்டேட் அந்த போனில் இடம்பெறும் இரண்டாவது அப்டேட் ஆகும். ஏற்கனவே போனை அறிமுகம் செய்த நாளில் அதன் FaceTime Activation பிரச்னைக்காக ஒரு அப்டேட் வெளியானது. தற்போது இது iOS 16.0.1 அப்டேட் கொண்டுள்ளது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய மேம்பட்ட வசதியாக இந்த ஐபோன் 14 ப்ரோவில் இடம்பெற்றுள்ள கேமரா வசதி பார்க்கப்படுகிறது. இதில் முதல் முறையாக 48MP கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கூடுதலாக Dynamic Island எனும் சாப்ட்வேர் வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கூடுதலான கேமரா வசதி, நேவிகேஷன், ஏர் போட் நிலை என்ன போன்றவற்றை தெரிந்துகொள்ளமுடியும்.

iPhone 14 vs Samsung Galaxy S22 Ultra! எது கெத்து போன்? நீங்க என்ன முடிவு பண்ணபோறீங்க?

ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த விற்பனை பொருளாக இந்த ஐபோன் பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அந்நிறுவனத்தின் 50% விற்பனை இந்த ஐபோனை நம்பியே உள்ளது. இதனுடன் அந்த நிறுவனம் ஆப் ஸ்டோர், ஆப்பிள் TV+, ஆப்பிள் வாட்ச், ஏர்போட் போன்றவற்றை விற்பனை செய்கின்றது.

அமெரிக்காவில் இந்த ஐபோன் 14 ப்ரோ 999 டாலர் விலைக்கும் இதன் ப்ரோ மேக்ஸ் 1,099 டாலர் விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இந்த iPhone 14 Pro விலை 12,9900 லட்சம் ரூபாய் மற்றும் iPhone 14 Pro MAX 1,39,900 லட்சம் ரூபாய் விலையிலும் கிடைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.