அமேசான் ஆஃபரில் ரூ.13 ஆயிரத்துக்கு ஐபோன்; வாய்ப்பை தவறவிடாதீங்க மக்களே!

ஐபோன் நிறுவனத்தின் புதிய வெளியீடாக ஐபோன் 14 வெளியாகியிருக்கிறது. இந்த மொபைலின் வருகை மற்ற ஐபோன் மொபைல்கள் மீதான விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, அமேசான் கிரேட் இந்தியன் 2022 விற்பனையில் ஐபோன்களுக்கு பெரிய தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெறும் 13 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் ஐபோன் வாங்கும் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம்.  

Amazon: iPhone 12 விலை

ஐபோன் 12, 64 ஜிபி பேஸிக் மாடலின் விலை அமேசான் தளத்தில் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. அசல் விலை ரூ.65,900 என்றபோதிலும் அமேசான் தளத்தில் வெறும் ரூ.42,999-க்கு நீங்கள் வாங்கலாம். அதாவது, இதற்கு முன்பிருந்த விலையில் இருந்து சுமார் ரூ.22,901 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும். கிரேட் டீல் என்று கூட செல்லலாம். 

இது மட்டுமில்லாமல் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.14,600 வரை தள்ளுபடி பெறலாம். இந்த தள்ளுபடி உங்களுக்கு முழுமையாக கிடைத்தால் iPhone 12-ன் விலை வெறும் 28,399 ரூபாயாகக் குறையும். அமேசான் ஆஃபரில் ஐபோன் 12-க்கு எந்த வங்கி சலுகையையும் வழங்கவில்லை. இருப்பினும், ஐபோன் 12-ஐ வாங்க விரும்பும் எவருக்கும் இந்த சலுகை சிறந்து ஒன்று என்றே கூறலாம். iPhone 12 சீரிஸில் உள்ள அனைத்து மாடல்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். 

Flipkart: iPhone SE 2020 விலை

iPhone SE 2020 Flipkart விற்பனையில் 15000 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கிறது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் சில நிபந்தனைகள் உள்ளன. iPhone SE 2020-ஐ எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் மட்டுமே 15 ஆயிரத்துக்கும் குறைவாக நீங்கள் பெற முடியும்.

Flipkart தளத்தில் Apple iPhone SE 2020-ன் அடிப்படை 64GB மாறுபாடு MRP ரூ. 39,900. ஆனால் தற்போது ரூ.30,499-க்கு கிடைக்கிறது, அதாவது ரூ.9401 -நீங்கள் சேமிக்கலாம். இதுதவிர நீங்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் நீங்கள் ரூ.16,900 வரை தள்ளுபடி பெறலாம். ஆச்சரியம் என்னவென்றால், முழு எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைத்தால், iPhone SE 2020-ன் விலை வெறும் ரூ.13,599 ஆக குறையும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.