வெறும் ரூ.13,000க்கு 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க அரிய வாய்ப்பு

Flipkart Big Billion Days Sale தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் பெரிய தள்ளுபடிகள் கிடைக்கின்றன. ரூ.20,999 மதிப்புள்ள 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவியை ரூ.13,000க்கு கீழ் வாங்கலாம்.

இந்த விற்பனைக்கு முன், தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை ரூ.20,999 ஆக இருந்தது. பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ.13,999 விற்பனை செய்யப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

Flipkart தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவியை வங்கிச் சலுகைகளுடன் வெறும் ரூ.13,000க்கு வழங்குகிறது. எக்ஸ்சேஞ்ச் மூலம் வாங்க விரும்புவோருக்கு ரூ.11,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி கிடைக்கும். இஎம்ஐ மூலம் வாங்க விரும்புவோருக்கு இஎம்ஐ விருப்பங்கள் ரூ.2,334 முதல் தொடங்குகின்றன.

Thomson 9A Series 43 Inch Smart TV அம்சங்கள் சென்ற வருடம் வெளியான ஸ்மார்ட் டிவி ஆகும். இதில் எல்இடி திரை உள்ளது. 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் முழு HD தெளிவுத்திறனை இது ஆதரிக்கிறது. 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் 1 ஈதர்நெட் போர்ட் உள்ளன. அதேபோல் இதில் பில்ட் இன் வைஃபை ஆதரவு கிடைக்கிறது.

தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது Android 9.0 இயங்குதளத்தில் இயங்குகிறது. செயற்கை நுண்ணறிவு, தனிப்பயனாக்கப்பட்ட இடைமுகம் போன்ற அம்சங்கள் இதில் உள்ளது. 40W ஒலி வெளியீடு கிடைக்கிறது. ஸ்டாண்டர்ட், மியூசிக், நியூஸ், மூவி, கேம், யூசர் போன்ற ஆடியோ மோடுகள் இதில் உள்ளன. 

தாம்சன் 9ஏ சீரிஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி சேமிப்பகத்தை ஆதரிக்கிறது. யூடியூப், பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகள் உள்ளமைக்கப்பட்டவை. பிற பயன்பாடுகளை Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். அதேபோல் இதில் ஸ்கிரீன் மிரரிங் வசதியும் உள்ளது. ரிமோட் கண்ட்ரோலில் Google Assistant ஆதரவு உள்ளது.

Flipkart தாம்சன் பிராண்டின் மற்ற ஸ்மார்ட் டிவிகளிலும் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது. 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.9,000க்கு கீழ் வாங்கலாம். வங்கிச் சலுகைகளுடன் ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடியைப் பெறலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.