எய்ம்ஸ் மருத்துவமனைக்குபுதிய இயக்குனர் நியமனம்| Dinamalar

புதுடில்லி,:புதுடில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை இயக்குனராக எம்.ஸ்ரீனிவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பணியாளர் மற்றும்பயிற்சி துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:தெலுங்கானா மாநிலம்ஹைதராபாதிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லுாரி குழந்தைகள் நலப் பிரிவு துறைத் தலைவராக உள்ள டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.அடுத்த ஐந்து ஆண்டுகள்அல்லது 65 வயது பூர்த்தியடைவது, இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை ஸ்ரீனிவாஸ் இந்தப் பதவியில் இருப்பார்.புதுடில்லி எய்ம்சில், 2017 முதல் இயக்குனராக இருந்த ரந்தீப் குலேரியா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இவருக்கு ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்-பட்டு இருந்தது. அதுவும் நேற்று முடிவடைந்தது.ஸ்ரீனிவாஸ் நியமனத்துக்கு அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.