கமல் செங்கடல்.. விஜய்சேதுபதி கருங்கடல்: பார்த்திபன் வர்ணனை

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படம் ஆஸ்கார் செல்லும் அளவிற்கு அருகில் வந்து நூலிழையில் அந்த வாய்ப்பை தவறவிட்டது. இதுகுறித்து பார்த்திபன் தனது வருத்தத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் அவர் தொடர்ந்து கமல் மற்றும் விஜய்சேதுபதியை அடுத்தடுத்து சந்தித்துள்ளார். நானும் ரவுடி தான், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் பார்த்திபன் – விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இதில் விஜய்சேதுபதியை சந்தித்துவிட்டு வந்த பார்த்திபன், 'ஆண்களில் ஷாரூக்கான், பெண்களில் கத்ரினா கைப் இருவரையும் பிரமிக்க செய்து கொண்டிருப்(பவர்)-ஐ சந்தித்தேன். நேசிக்கும் கிளியும், வாசிக்கும் பியானோவும், யோசிக்கும் புதிய மார்க்கமாய் கண்டு ரசித்தேன் ரம்யமாய்.. கமல் சார் செங்கடல் என்றால் இவர் கருங்கடல்.. கடலாய் இருவருக்குமே அறிவின் அலை கரை நீள்கிறது. பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்று கூறியுள்ளார்.

அவர் கமல் மற்றும் விஜய்சேதுபதியின் விசாலமான அறிவு குறித்து சொல்வதற்காக செங்கடல், கருங்கடல் என்கிற வார்த்தைகளை அழகியல் நோக்கில் பயன்படுத்தி இருந்தாலும், நெட்டிசன்கள் பலர், பாராட்டுவதில் கூட நிறபேதம் பார்க்கிறீர்களே பார்த்திபன் என கிண்டலாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.