8 ஓவர் அதிரடி போட்டி! இந்தியா அசத்தல் வெற்றி!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் முக்கியமான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. மழையின் காரணமாக போட்டி தாமதமாக தொடங்கப்பட்டது, இதனால் ஒவ்வொரு அணிக்கும் மொத்தமாக 8 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பில்டிங் தேர்வு செய்தது.

 

இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக பும்ரா அணியிடம் பெற்றிருந்தார், மேலும் உமேஷ் யாதாவிற்கு பதிலாக, கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.  ஆஸ்திரேலியா அணி ஆரம்பம் முதலே அக்சரின் சூழலில் வீழ்ந்தது.  மேக்ஸ்வெல் மற்றும் டிம் டேவிட் ஆகியோரது விக்கெட்டுகளை அக்சர் கிளீன் போல்ட் மூலம் கைப்பற்றினார். இருப்பினும் பின்ச் மற்றும் வேட் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். 8 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கெட்களை இழந்து 90 ரன்கள் குவித்தது. சிறிது கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா சிறப்பான துவக்கம் கொடுத்தார். தனது அதிரடியால் சிக்ஸர் மழைகளை பொழிந்தார். 

 

ராகுல், கோலி அவுட் ஆகா, சூரியகுமார் யாதவ் முதல் பந்தியிலேயே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். கடைசி ஓவரின் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். நான் எதற்கு அணியில் இருக்கிறேன் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார் கார்த்திக். கேப்டன் ரோஹித் சர்மா கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என்று முன்னிலை வைத்துள்ளது. வரும் 25ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.