Flipkart Offer: 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.2,499-க்கு விற்பனை

Flipkart Big Billion Days 2022: Flipkart-ல் Big Billion Days விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை செப்டம்பர் 30ம் தேதி வரை நடக்கிறது. விற்பனையின் போது, ​​ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்கள் மீது பெரும் தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் குறைவான பட்ஜெட்டில் ஸ்மார்ட் டிவி வாங்க திட்டமிட்டு இருந்தால் சரியான வாய்ப்பு. ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.2,499க்கு வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். 

Thomson 9A Series 40 inch Smart TV சலுகைகள்

தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.21,499. ஆனால் பிளிப்கார்ட்டில் ரூ.14,999-க்கு கிடைக்கிறது. 30% தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு பல வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உள்ளன. இதன் காரணமாக ஸ்மார்ட் டிவயின் விலை மேலும் கணிசமாக குறையும்.

Thomson 9A Series 40 inch Smart TV வங்கி சலுகை

தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க ஐசிஐசிஐ வங்கி அல்லது ஆக்சிஸ் வங்கி கார்டைப் பயன்படுத்தினால், உங்களுக்கு ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் இந்த ஸ்மார்ட் டிவியின் விலையை மேலும் குறையும். 

Flipkart; ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் 

தாம்சன் 9ஏ சீரிஸ் 40 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.11 ஆயிரம் எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. நீங்கள் பழைய டிவியை மாற்றினால், உங்களுக்கு புதிய டிவி வாங்கும்போது இந்த சலுகை கிடைக்கும். ஆனால் ஸ்மார்டிவியின் கண்டிஷன் நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.11 ஆயிரம் தள்ளுபடி கிடைக்கும். உங்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகை முழுமையாக கிடைத்தால் வெறும் ரூ.2,499-க்கு டிவியை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.