காலாண்டு விடுமுறையில் மாற்றம்.. பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், நடப்பு கல்வி ஆண்டில் வழக்கம் போல், ஜூன் மாதம் முதல் நேரடி முறையில், வகுப்புகள் செயல்படத் தொடங்கியது. அது மட்டுமல்லாமல் மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதற்கான வினாத்தாள்கள் பள்ளி அளவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்புகள் வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதால் முன்னதாக 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 9ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அக்டோபர் 5-ம் தேதி வரை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. 30.09.2022 அன்று காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும், ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022, 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும். (மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும்.)

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சசி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் (ந.எண்.2411/ஈ2/2021 நாள்.26.09.2022) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.