உ.பி: மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த புல்டோசர்.. கலாட்டா செயத பாஜக நிர்வாகியின் மனைவி!!

பாஜக பிரமுகர் ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா பகுதியில் உள்ள ‘கிராண்ட ஓமேக்ஸ் சொசைட்டி’ என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் பாஜக விவசாயப் பிரிவுத் தலைவர் ஸ்ரீகாந்த் தியாகி. 34 வயதான இவர் கடந்த மாதம் தனது குடியிருப்பில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். இதைப்பார்த்த அதே குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் இது விதிமீறலாக இருப்பதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

image
இந்த வாக்குவாதம் இருவருக்குமிடையே மோதலாக வெடித்த நிலையில், அந்த பெண்ணை ஸ்ரீகாந்த் ஆபாசமாகப் பேசியுள்ளார். மேலும் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாகி இருந்த ஸ்ரீகாந்த் தியாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ஸ்ரீகாந்த் தியாகியின் வீட்டில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை காவல்துறையினர் புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர்.

image
ஸ்ரீகாந்த் தியாகி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி அனு தியாகி தனது குடியிருப்பில் உள்ள ஒரு பொது இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து அங்கு மரக்கன்றுகளை வைத்துள்ளார். இதனால் அங்கு மீண்டும் பிரச்சினை எழுந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் புல்டோசர் உடன் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு விரைந்தனர். அப்போது ஸ்ரீகாந்த் தியாகியின் உறவினர்கள் சிலர் குடியிருப்பின்  நுழைவு வாயிலை பூட்டிவிட்டு, வாயிலுக்கு வெளியே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் உள்ளே நுழைந்த புல்டோசர் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றியது. அப்போது ஸ்ரீகாந்த் தியாகியின் மனைவி அனு தியாகி கூச்சலிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: பிரபல யூடியூபர் சாலை விபத்தில் உயிரிழப்பு – அதிர்ச்சியில் சப்ஸ்கிரைபர்ஸ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.