புதிய மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில்: கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர்

காந்திநகர்: புதிய மேம்படுத்தப்பட்ட வந்தேபாரத் ரெயிலை குஜராத்தின் காந்திநகரில் பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயிலை மக்கள், விமானங்களை விட  அதிகம் விரும்புவார்கள் என தெரிவித்தார்.

இந்தியாவில் அடுத்த 3ஆண்டுகளில் புதிய தலைமுறைக்கான 40 அதிவேக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், நாட்டின் 3ஆவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வந்தேபாரத் ரெயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் இந்த புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. வந்தேபாரத் ரெயிலை தொடங்கி வைப்பதற்காக காந்திநகர் ரெயில் நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, ரெயிலின் என்ஜின் பகுதிக்கு சென்று அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் புதிய வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர், சக பயணிகள் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் அகமதா பாத் வரை வந்தேபாரத் ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார். மொத்தம் 16பெட்டிகளில் 1128 பயணிகள் இந்த வந்தே பாரத் ரெயிலில் பயணிக்க முடியும். மும்பை-காந்தி நகர் இடையே சூரத், வடோதரா, அகமதா பாத் ஆகிய மூன்று நிறுத்தங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும். சுமார் 6 மணி 20 நிமிடங்களில் இந்த ரெயில் 520 கிலோமீட்டர் தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது.

குஜராத்தில் காந்திநகர்-மும்பை வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரயிலுக்குள் சென்று ஆய்வு நடத்திய பிரதமர், அகமதாபாத் வரை வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தும் மகிழ்ந்தார்.

இந்த அதி நவீன வந்தே பாரத் ரெயிலில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஸ்டீலுக்கு பதிலாக எடை குறைந்த அலுமினியம் தகடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரெயிலின் எடை 50 டன்கள் வரை குறைவதுடன், குறைந்த ஆற்றலில் அதிவேகமாக செல்லும் என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.