மோடி அரசின் நிர்வாக சீர்கேடுகளை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளிச்சம் போட்டுக் காட்டினார்…

பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் சுரண்டல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் மோடி அரசு மீது தொடர்ந்து வருகிறது.

ஆனால், மோடி அரசு கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு சாகசங்களை செய்திருப்பதாக பாவ்லா காட்டி வருகின்றனர் பாஜகவினர்.

இந்த நிலையில், நாகபூரில் ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான பாரத் விகாஸ் பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாட்டில் ஏழை பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“வளமான நாடாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் வறுமை, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம், சாதிவெறி, தீண்டாமை மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்கிறார்கள். இங்கே பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது, இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும்.

நாட்டில் நகர்ப்புறங்களில் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் கிராமப்புறங்களில் வசதிகள் மற்றும் வாய்ப்புகள் இல்லாததால், அதிக மக்கள் நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என நாம் கருதுகிறோம், ஆனால் இங்கு ஏற்றத்தாழ்வுகள் அதிகம்” என்று கூறிய மத்திய அமைச்சர்.

“ஏழை மக்கள்தொகை கொண்ட பணக்கார நாடு இந்தியா” என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு இதே காரணங்களைக் கூறி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை அளித்திருக்கும் அதே வேளையில் பாஜக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.