கைது செய்யப்பட்ட டி.டி.எஃப் வாசன்… காவல்துறையிடம் விளக்கம்… நடந்தது என்ன?!

கோவை யூ-ட்யூபர் டி.டி.எஃப் வாசன் சமீப காலங்களாக தொடர் சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் டிக்டாக் பிரபலம் ஜி.பி முத்துவுடன் கோவை சாலைகளில் பைக்கில் அதிவேகமாக பயணித்தார்.

ஜி.பி முத்து டி.டி.எஃப் வாசன்

இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால், கைது பயத்தில் வாசன் வீடியோ வெளியிடாமல் இருந்தார்.

இதையடுத்து போத்தனூரில் பதியப்பட்ட வழக்குக்காக மதுக்கரை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். பிறகு தன்னை ஊடகங்கள் திட்டமிட்டு பிரச்னையில் சிக்க விடுவதாக ஓர் வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து பல்வேறு பயணங்களை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

டி.டி.எஃப் வாசன்

இந்நிலையில், பெங்களூர் செல்வதற்காக நேற்று  இரவு அவர் இருசக்கர வாகனத்தில் சூலூர் கண்ணம்பாளையம் அருகே சென்றுள்ளார். அப்போது வாகனத் தணிக்கையின் போது போலீஸிடம் சிக்கினார்.

அவரை கைது செய்த போலீஸ், சூலூர் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். சிறிது நேரம் அவரிடம் விசாரணை நடந்த நிலையில், அவர் ஸ்டேசன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். போலீஸார் கூறுகையில், “அதிவேகப் பயணம் என்பது ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குதான்.

டி.டி.எஃப் வாசன்

அதனால் விசாரித்து அனுப்பிவிட்டோம்.” என்றனர். இதுகுறித்து டி.டி.எஃப் வாசன் செய்தியாளர்களிடம், “என் தவறை உணர்ந்துவிட்டேன்.  இனிமேல் வேகமாக செல்ல மாட்டேன் என கூறியிருக்கிறேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.