ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை நிறுத்த வசதியில்லை… பெங்களூரு நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்!

சென்னை – பூவிருந்தவல்லியில் இருந்து புறப்படும் ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், பெங்களூரு நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையிலிருந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆந்திரா, கர்நாடகாவுக்கும் செல்ல பூவிருந்தவல்லியிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூவிருந்தவல்லியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே, பணிமனையின் அருகே அணுகு சாலையில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.
image
இடப்பற்றாக்குறை காரணமாக, அணுகுசாலையிலே நிறுத்தப்படுகின்றன. வழக்கமாகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இப்பகுதியில், தற்போது சாலை விரிவாக்கப் பணிகளும் நடக்கின்றன. இதனால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலையில் அணிவகுக்கும் வாகனங்கள், நத்தை போல ஊர்ந்தபடியே நகர்கின்றன. மேலும், சிறப்புப் பேருந்துகளை இயக்கும் பை பாஸ் பகுதியில் நிழற்குடையோ கழிவறை வசதியோ செய்யப்படாததால் குடும்பத்துடன் புறப்படும் பயணிகள் தவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.