அனைவருக்கும் மீண்டும் பென்சன்; அமைச்சர் ஹேப்பி தகவல்..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 150 கர்ப்பிணி பெண்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஊட்டச்சத்து பொருட்களையும் வளைகாப்பு பொருட்களும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் 141 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், மின்னணு குடும்ப அட்டை, ஆதரவற்ற விதவை சான்று, சாலை விபத்து நிவாரண உதவி தொகை ரூ 20,29,660 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வீட்டில் வளைகாப்பு நடத்த முடியாதவர்களுக்கு சகோதரனாக இருந்து முதல்வர் வளைகாப்பு நடத்துகிறார். பிரச்சனையில்லாத வீடுகள் இல்லை. பிரச்சைனையை தள்ளிவிட்டு பிரசவகாலத்தில் நல்ல மனநலத்துடன் இருக்க வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் .பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கவலை வேண்டாம். பெண்கள் தான் அனைத்து போட்டிகளிலும் ஜெயிக்கிறார்கள். எந்த குழந்தையாக இருந்தாலும் அது நம்முடைய குழந்தைகள். சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களித்துள்ளீர்கள் உங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

இதுவரை 4,92,000 பேருக்கு முதியோர் பென்சன் வழங்கியுள்ளோம். முதியோர் பென்சன் வாங்கும் நபர்களை நீக்கி இருக்கிறோம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அனைத்து ஆட்சியிலும் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்வது வழக்கமான ஒன்றுதான். தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் ஆய்வு செய்து தகுதியுடைய அனைவருக்கும் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும் எல்லோருக்கும் எல்லாம் வழங்கக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி என இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.