இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு அமல்..!

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. 92 ரக பெட்ரோலின் விலையில் 40 ரூபாய் குறைக்கப்பட்டு 410 ரூபாய்க்கும், 95 ரக பெட்ரோலின் விலையில் 30 ரூபாய் குறைக்கபப்ட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிற எரிப்பொருள்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் பெட்ரோல் விலையை குறைக்க உள்ளதாக வெளியான தகவல் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.