ஆபரேசன் கஞ்சா… சாட்டையை சுழற்றிய டிஜிபி… 2000 வங்கி கணக்குகள் முடக்கம்!

கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களின் உற்பத்தி, லிநியோகம மற்றும் விற்பனைக்கு தமிழகத்தில் தட செய்யப்பட்டிருந்தாலும், சந்தையில் இவற்றின் விற்பனை இன்றும் கனஜோராக நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. அத்துடன் பள்ளி, கல்லூரி வளாகங்களுக்கு அருகேயும் போதைப்பொருட்கள் விற்பனை படு ஜோராக நடைபெறுவது அரசுக்கு புதுதலைவலியை ஏற்படுத்தி வந்தது.

இதனையடுத்து ,தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் ‘ஆபரேஷன் கஞ்சா’ எனும பேரில் மாநிலம் முழுவதும் வேட்டை நடத்தப்பட்டது.. இந்த சோதனைகளினபோது பல நூறு டன்கள் அளவில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் ‘கஞ்சா வேட்டை 2.0’ வேட்டை நடத்தப்பட்டது. இதிலும் பல ஆயிரம் டன் போதைப் பொருட்கள் போலீசார் வசம் சிக்கின.

அத்துடன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆயிரகணக்கான வியாபாரிகளும் போலீசாரிடம் வசமாக சிக்கினர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு சொந்தமான மொத்தம் 2,000 வஙகி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கணக்குகள் நகைகள் மற்றும் பணம் என மொத்தம் 50 கோடி ரூபாய் மதி்ப்பிலான சொத்துகள் உள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேபோன்று கஞ்சா வியாபாரிகளின் பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் மாநாடு, சில மாதங்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பேசிய முதல்வர், ‘கஞ்சா விற்பனை தமிழகத்தில் ஒழிக்கப்படவில்லை என்றால் அதிகாரிகளுக்கு எதிராத தான் சர்வதிகாரியாக மாறுவேன்’ என்று எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.