பும்ராவிற்கு பதில் இவரா? சிஎஸ்கே-ன் இளம் வேகப்பந்து வீச்சாளருக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு?

சமீபத்திய அறிக்கைகளின்படி, முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சகாரியா ஆகியோர் 2022 ஆம் ஆண்டு ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பைக்காக டீம் இந்தியாவுடன் அக்டோபர் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர். அவர்கள் இருவரும் பேக் அப் பிளேயர்களாக அணியில் சேர்க்கப்பட உள்ளனர். முன்னதாக, முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உலக கோப்பை அணியில் ஆஸ்திரேலியா செல்லவுள்ளனர் என்று தகவல் வெளியானது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.  

பும்ரா திருவனந்தபுரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டுவென்டி 20 சர்வதேசப் போட்டிக்கு முன்னதாக காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார்.  மேலும் உலக கோப்பை 2022 தொடரில் இருந்தும் அவர் விலகியதாக பிசிசிஐ அதிகார்வப்பூர்வமாக அறிவித்தது.  முதுகுத்தண்டில் எலும்பு முறிவு உறுதி செய்யப்பட்டதால் அவர் விலகியுள்ளார். முகமது சிராஜ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20தொடரில் அவருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 61 ரன்களும், துணை கேப்டன் கே.எல். ராகுல் 28 பந்துகளில் 57 ரன்களும் எடுத்து இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  இந்த வெற்றியின் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் டி20 தொடரை கைப்பற்றியது. இரு அணிகளும் இன்று அக்டோபர் 4-ம் தேதி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் 3வது டி20 போட்டி நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.