கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு; அலறிய மக்கள்… அடித்துக் கொன்ற ஊழியர்கள்!

திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை வழக்கம்போல், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்தது. ஆட்சியர் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு மக்கள் சிலர் வந்திருந்தனர்.

அப்போது, பழைய பொருள்கள் வைத்திருக்கும் அறையிலிருந்து கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று, பொதுமக்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி வந்தது. இதைப் பார்த்த மக்கள், அலுவலர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் அங்கு விரைந்த ஊழியர்கள் சிலர் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர்.

மாவட்ட்ட ஆட்சியர் அலுவலகம்

இது குறித்து ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், “தரைத்தளத்தில் உபயோகமற்ற பழைய இருக்கைகள், மேஜைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதியில்தான் பாம்புகள் அதிகமாக உள்ளன. பாம்புகளைப் பிடிக் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அடித்துக் கொல்லப்பட்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒரு மாத குட்டியாக இருப்பதால், இங்கு இன்னும் நிறைய பாம்புகள் இருக்க வாய்ப்புள்ளது.

மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற அதிக விஷமுள்ள பாம்புகள் இருப்பதால், அச்சத்துடனே பணியாற்ற வேண்டியுள்ளது. வனத்துறை மூலம் பாம்புகளைப் பிடித்து அப்புறப்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.