பிக்பாஸ் தமிழ்: களமிறங்கும் போட்டியாளர்கள் முழு விவரம்

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கடந்த சீசன்களைவிட இந்தமுறை அதிக போட்டியாளர்களை களமிறக்கும் பிக்பாஸ், ஒவ்வொரு துறையில் இருந்தும் ஸ்டாராக இருப்பவர்களை அலசி ஆராய்ந்து தூக்கியுள்ளது. குறிப்பாக, சமூகவலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் இந்த முறை பிக்பாஸ் வீட்டில் களமிறக்கப்பட இருப்பதால், பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கன்டென்டுக்கும், ரணகளத்துக்கும் பஞ்சமிருக்காது என்பதால் அவர்களை பிக்பாஸ் டீம் குறிவைத்து தூக்கியதற்கு மிக முக்கிய காரணம். இந்நிலையில் யாரெல்லாம் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள பிக்பாஸ் ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்கள் இரண்டு பேர், அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். அதுபோக, யூடியூப் பிரபலம், நியூஸ் ரீடர் ஒருவர், டான்ஸ் மாஸ்டர், வெள்ளித்திரையை சேர்ந்த ஒருவர், மாடலிங்கில் இருக்கும் இரண்டு பேர் என மொத்தம் 21 பேர் இந்த முறை களமிறக்கப்பட இருக்கின்றனர்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமடைந்த ரக்ஷிதா, நடிகை மைனா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஜிபி முத்து, சூப்பர் மாடல் ஷெரீனா, மெட்டி ஒலி சாந்தி, நடன இயக்குநர் மணிகண்டன், விஜே கதிரவன், நடிகை விஷித்ரா ஆகியோரின் பெயர்கள் டாப் லிஸ்டில் அடிபடுகிறது. இவர்களை தவிர இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவரும் பங்கேற்க இருப்பது உறுதியாகியுள்ளது. வெளிநாட்டில் விஜய் டிவியை பார்ப்பவர்களுக்காக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை தவறாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் விஜய் டிவி களமிறக்கி வருகிறது. அந்த ஃபார்முலாபடி தான் இந்தமுறையும் இலங்கை, சிங்கப்பூர் போட்டியாளர்கள் களமிறக்கப்படுகின்றனர். இன்னும் சிலரின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.