உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம்: உயர்த்தி வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு சென்றிருந்த தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணி கிராமம், சிலுவைப்பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (வயது 38), பிருத்விராஜ் (வயது 36), தாவீதுராஜா (வயது 30), பிரவீன்ராஜ் (வயது 19), ஈசாக் (வயது 19) மற்றும் அண்டோ கெர்மஸ் ரவி ஆகிய ஆறுபேரும் அக்டோபர் 3ஆம் தேதி காலை சுமார் 9 மணியளவில், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றபோது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நிவாரணத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வலியுறுத்தியுள்ளார் எதிர்கட்சித் தலைவர்

.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சார்லஸ் (38), பிரித்திவிராஜ் (36 ), தாவீது (30), ஈசாக் (19), பிரவீன்ராஜ் (19), கெர்மஸ் (18) ஆகிய ஆறு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை தருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த திமுக அரசு மணல்போக்கி குறித்து எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் வைக்காததை கண்டிப்பதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.