மேலும் இரண்டு அரச நிறுவனங்களுக்கு QR முறை

சமுர்த்தி கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய நலன்புரி நடவடிக்கைகளை சீர்செய்வதற்காக QR Code முறையை  அறிமுகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. 

சமுர்த்தி பயனாளிகள் மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் உதவி தேவைப்படுவோரையும் இந்த அமைப்பில் உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கட்டமைப்பில் முதியோர்கள், உடல் ஊனமுற்றோர், நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அரசிடமிருந்து உதவிகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆகியோர் உள்ளடங்குவர்.

நலன்புரி நன்மைகளை பெறுவதற்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசின் நிதி உதவி தேவைப்படும் பிற குடும்பங்களையும் இது உள்ளடக்கி உள்ளது.

இந்த அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலமாக நலன்புரி உதவிகள் தேவைப்படுபவர்களை அடையாளம் காணவும், தவறாக பயன்படுத்துவதைத் தடுப்பதுமே இதன் பிரதான நோக்கம் ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.