மெட்ரோ சிரிஷ் நடித்துள்ள ‘பிஸ்தா’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

Pistha Movie Review: 2016ம் ஆண்டு வெளியான மெட்ரோ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ்.  இந்த படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார். அவரது நடிப்பில் உருவான பிஸ்தா படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரமேஷ் பாரதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிரிஷ், யோகி பாபு, சதீஸ், அருந்ததி நாயர், நமோ நாராயணன் போன்றோர் நடித்துள்ளனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு முடிவடை நிலையில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.  இந்நிலையில் இன்று இப்படம் வெளியாகி உள்ளது.

ஹீரோ சிரிஷ் பிடிக்காமல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களை அவர்களுக்கு விருப்பப்பட்டவர்களோடு சேர்த்து வைக்கும் வேலை செய்து வருகிறார்.  இதனால் அடிக்கடி பல பிரச்சினைகளிலும் மாட்டிக் கொள்கிறார். ஊரில் உள்ள அனைவரும் அவரை பார்த்தாலே பயப்படுகின்றனர். இந்நிலையில் அவருக்கு ஒரு பெண்ணை பார்த்தவுடன் பிடித்து விடுகிறது, அந்த பெண்ணிற்காக தான் செய்யும் வேலையை விட்டு விடுகிறார். பின்பு இவர்களுக்கு திருமணம் ஆகும் வேளையில் அவர் முன்பு செய்த வேலையினால் சிரிஷ்க்கு பிரச்சினை வருகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா? என்பதே பிஸ்தா படத்தின் கதை.

கிராமத்து கதை களத்தில் அழகான காட்சி அமைப்புகளோடு பிஸ்தா படம் எடுக்கப்பட்டுள்ளது.  அமைதியாகவும் அழகாகவும் ஹீரோ சிரிஷ் படம் முழுக்கவும் வருகிறார், அவருக்கு இந்த படத்தில் கொடுக்கப்பட்ட காஸ்டியூம்கள் சிறப்பாக இருந்தது.  ஹீரோ உடன் பட முழுக்க வரும் கதாபாத்திரத்தில் சதீஷ் நன்றாக நடித்துள்ளார். இவர்களின் பாஸாக வரும் யோகி பாபுவின் ஒன்லைன் கவுண்டர்கள் சில இடங்களில் நன்றாக சிரிக்க வைக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் வேறு யாரேனும் நடிக்க வைத்திருந்தால் இன்னும் கச்சிதமாக இருந்திருக்கும்.  

காலையில் கல்யாணத்தை வைத்துக் கொண்டு இரவு முழுவதும் பெண் தேடுவது போல் வரும் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது.  சுவாரஸ்யமான கதைகளம் கொண்ட இந்த கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, நகைச்சுவை காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.  ஆரம்பத்தில் புதிய புதிய காட்சிகள் மூலம் கதை நகர்ந்தாலும் ஆங்காங்கே சில தொய்வு ஏற்படுகிறது.  தரணி இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு ஏற்றார் போல் இருந்தது.  பிஸ்தா போதுமான அளவு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.