நிதி மோசடி சம்பந்தமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் இருந்து கைப்பற்றிய கையடக்க தொலைபேசி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் கைதியிடம் செல்போனை

50 ஆயிரம் ரூபாவை தருவதாக கூறி, சிறையில் இருக்கும் பெண்ணொருவரிடம் அவர் இந்த கையடக்க தொலைபேசியை பெற்றுக்கொண்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த பெண் கைதிக்கு இந்த கையடக்க தொலைபேசி எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட இந்த கையடக்க தொலைபேசி தற்போது குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பொறுப்பில் இருப்பதுடன் அதில் உள்ள விபரங்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.