புதுடில்லி : சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.,யும்; பரோட்டா வுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட்டிருப்பது சரியானது தான் என, ஜி.எஸ்.டி., மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தெளிவுபடுத்தி உள்ளது.
சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், பரோட்டாவுக்கு மட்டும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டது.
மேல்முறையீடு
இதையடுத்து, இது குறித்து பரோட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இது குறித்து தெளிவுபடுத்தி உள்ளது.
ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ‘பேக்’ செய்யப்பட்ட உறைந்த பரோட்டாவும், சப்பாத்தி மற்றும் ரொட்டியும் வேறு வேறானவை. பரோட்டாவை சாப்பிடுதவற்கு முன் சமைக்க வேண்டிய தேவை உள்ளது. சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா ஆகியவற்றுக்கு கோதுமை மாவு பொதுவானதாக இருந்தாலும், பரோட்டாவில் வேறு சில பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
சப்பாத்தி, ரொட்டி
இந்த பரோட்டாக்கள் மலபார், மிக்ஸ்டு வெஜிடபிள், ஆனியன், மேத்தி, ஆலு, லச்சா என பலவிதங்களில் தயாரிக்கப்படுவதுடன், அவற்றில் எண்ணெய், உப்பு, உருளைக்கிழங்கு, காலிபிளவர், கொத்தமல்லி என பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.
இத்தகைய காரணங்களால், பரோட்டா என்பது சப்பாத்தி, ரொட்டியிலிருந்து வேறுபட்டது. எனவே, சப்பாத்தி, ரொட்டி ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் 5 சதவீத வரி வரம்புக்குள் வர, பரோட்டா தகுதியற்றது. இவ்வாறு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அகமதாபாதைச் சேர்ந்த ‘வாடிலால் இன்டஸ்ட்ரீஸ்’ குஜராத் மேல் முறையீட்டு ஆணையத்தின் தீர்ப்புக்கு எதிராக முறையிட்ட நிலையில், இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement