பிக்பாஸ் போட்டியில் இருந்து ஜிபி முத்து வெளியேறி இருக்கிறார். கடந்த ஒருவாரமாகவே அப்செட்டாகி இருந்த ஜிபி முத்து, வீட்டில் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவரால் முழுமையாக எந்த போட்டியிலும் கலந்து கொள்ள முடியவில்லை. பிக்பாஸ் அழைத்து பேசியபோது, குடும்பத்தின் மீது ஞாபகம் இருப்பதாக கூறிய ஜிபி முத்து, மகனை பிரிந்து இருக்கவே முடியவில்லை என கண்ணீர் விட்டார். பிக்பாஸ் ஆறுதல் கூறியபோதும், அவரால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை.
வார இறுதி நாளான நேற்று கமல்ஹாசனும், ஜிபி முத்துவிடம் இது குறித்து கேட்டார். அப்போதும், குடும்பத்தையும், மகனையும் பிரிந்து தன்னால் இருக்கவே முடியவில்லை என கூறிய ஜிபி முத்து, தயவு செய்து மக்கள் என்னுடைய நிலையை புரிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். கமலும் ஜிபி முத்துவை சமரசம் செய்ய சில வார்த்தைகள் கூறினார். ஆனால் அவர் அதனை கேட்டுக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற ஜிபி முத்துவை அனுமதித்தார் கமல்.
கன்பெஷன் ரூமில் பேசிக் கொண்டிருந்தவாறே வெளியேறினார் ஜிபி முத்து. அவர் மீண்டும் வீட்டுக்குள் செல்ல முயற்சித்தபோது, இனி உங்களுக்கு அந்த கதவு திறக்காது, வேறு வழி இருக்கிறது என கூறி முத்துவை அனுப்பி வைத்தார். அதேநேரத்தில் முதல் எலிமினேஷனில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. பிக்பாஸ் போட்டியாளர் சாந்தி முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.