ரவீந்திரநாத் ஆஜராக இரண்டாவது சம்மன் அனுப்பிய வனத்துறை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அடித்த கைலாசப்பட்டி வனப்பகுதியில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சிறுத்தை மின்வேலியில் சிக்கியிருந்தது. அதனை வனத்துறையினர் மீட்க முயற்சித்த போது உதவி வன பாதுகாப்பு அலுவலர் மகேந்திரனை தாக்கி விட்டு தப்பி சென்றது. பின்னர் அந்த சிறுத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் தோட்டத்தில் மறுநாள் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தது. அவசரகதியில் பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர் அதே இடத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கடை அமைத்து ஆடு வளர்த்து வந்த அலெக்ஸ் பாண்டியன் என்ற விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர். விவசாயி அலெக்ஸ் பாண்டியன் கைதை கண்டித்து பல்வேறு தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் கால்நடை வளர்ப்போர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தோட்டத்தின் மேலாளர்கள் ராஜவேல் மற்றும் தங்கவேல் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்த சிறையில் அடைத்தனர். 

ஆனால் அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் என் பெயர் ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை அடுத்து வனத்துறையினர் சார்பில் ரவீந்திரநாத்திற்கு கடந்த நவம்பர் 1ம் தேதி மாவட்ட வனத்துறை அலுவலர் முன்பு ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது. 

ரவீந்திரநாத் ஆஜராகாத நிலையில் அவர் சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் வந்து வனத்துறையினரிடம் விளக்க கடிதத்தை அளித்தனர். அந்த கடிதத்தில் புதுடெல்லியில் நீர்வளத் துறையின் நதியின் மேம்பாட்டு கங்கை புத்துயிர் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில் ஏழாவது இந்திய நீர்வள விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் ரவீந்திரநாத் கலந்து கொள்வதால் நேரில் ஆஜராக முடியவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் முன்பு ஆஜராகும்படி இரண்டாவது முறையாக ரவிந்திரநாத்துக்கு சமன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் நாளை(நவம்பர் 12) தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் சமர்தா முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த முறை மத்திய அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக காரணம் சொல்லி வாய்தா வாங்கிய ரவீந்திரநாத் இந்த முறை என்ன காரணம் சொல்லி தப்பிக்க போகிறார் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.