வரலாற்றில் முதற்தடவையாக மாணவர் பாராளுமன்றத் தேர்தலூக்காக இலத்திரனியல் வாக்குப்பதிவு எஹலியகொட தேசிய பாடசாலையில் ஆரம்பம்

முதன்முறையாக இலத்திரனியல் வாக்குப்பதிவு மூலம் தெரிவான மாணவர் பாராளுமன்றம் எஹெலியகொட தேசிய பாடசாலையில் அண்மையில் (04) கூடியது. அதற்கு சமாந்தரமாக ஜனநாயகம், இலங்கை பாராளுமன்ற முறைமை மற்றும் மரபுகள் தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்த மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இதற்கு முன்னரான ஒரு தினத்தில் எஹெலியகொட தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட இந்த பொதுச் சேவைகள் நிகழ்ச்சி எஹெலியகொட தேசிய பாடசாலை அதிபர் டபிள்யு.ஏ.எம்.எச்.எம். ராஜகுரு மேற்கொண்ட விசேட வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான ஜனகாந்த சில்வா உள்ளிட்ட பாராளுமன்ற அதிகாரிகள் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

எஹெலியகொட தேசிய பாடசாலை அதிபர் டபிள்யு.ஏ.எம்.எச்.எம். ராஜகுரு, உதவி அதிபர் நிஹால் ரணவீர, அப்பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற ஒருங்கிணைப்பு ஆசிரியர் தசுன் கமகே, தொழிநுட்ப கல்வி ஆசிரியை தமாரா ஜயசேன உள்ளிட்ட ஆசிரியர்களும்இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மாணவர் பாராளுமன்ற அங்கத்தவர்கள், எஹெலியகொட தேசிய பாடசாலை மாணவர்களுடன் எதிர்வரும் காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிட வருகைதரவுள்ளனர்.

பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் உங்களது பாடசாலையிலும் இலங்கை பாராளுமன்றம் தொடர்பில் இவ்வாறான விசேட பொதுச் சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.