#BIG BREAKING:- நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை ..!!

தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. பின்னர் 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மொத்தம் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. பேரறிவாளனை கடந்த மே மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்நிலையில் , ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.