அப்பேட் கேட்டு டார்ச்சர் பண்ணாதீங்க: ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிம்பு நடித்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் 50வது நாள் விழா நடந்தது. விழாவில் சிம்பு பேசியதாவது:

இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதிக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ.ஆர் ரகுமானுடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் நான் சொல்ல வேண்டும். படம் பண்ணிட்டு இருக்கும் போது அடிக்கடி அப்டேட் கேட்கிறீர்கள். உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தயாரிப்பாளர் இயக்குனர், நடிகர் இணைந்து அதிக வேலைகள் செய்து கொண்டிருக்கிறோம். தினமும் நீங்கள் ஏதாவது அப்டேட் கொடுங்கள் என்று கேட்கும் பொழுது அவசரத்தில் தவறான முடிவு எடுக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலை. எங்களுக்கு அதற்கான இடம் கொடுத்தால்தான் நல்ல படங்கள் வரும். இதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் கதாநாயகர்களை தூக்கி மேலே வைப்பார்கள். நான் என் ரசிகர்களை தூக்கி மேலே வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் படம் மட்டுமல்ல எந்த படத்திற்கும் அடிக்கடி அப்டேட் தொந்தரவு செய்யாதீர்கள் உங்களுக்கு நல்ல படம் கொடுக்க நாங்கள் எல்லாம் உழைத்து கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு சிம்பு பேசினார்.

சிம்பு தங்களை குறித்தே பேசி இருக்கிறார் என்று அஜித் ரசிகர்கள் சிம்புவை சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.