உலக கோப்பை கால்பந்து : மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி அறிவிப்பு ..!

பாரீஸ்,

22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது. அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.

இதில் அர்ஜென்டினா அணி ‘சி ‘ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அர்ஜென்டினா 2 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்த்து. உலகின் மிக பலம் வாய்ந்த அணியாக அர்ஜென்டினா கருதப்படுகிறது.

இந்த நிலையில் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி 26 பேர் கொண்ட உலக கோப்பைக்கான அர்ஜென்டினா அணியை அறிவித்துள்ளார். மெஸ்ஸி அணிக்கு தலைமை வகிக்கிறார்.

அர்ஜென்டினா அணி

கோல்கீப்பர்கள்: பிராங்கோ அர்மானி , எமிலியானோ மார்டினெஸ் , ஜெரோனிமோ ருல்லி

பின்களம் : கோன்சாலோ மான்டியேல் , நாஹுவேல் மோலினா , ஜெர்மன் பெசெல்லா , கிறிஸ்டியன் ரோமெரோ, நிக்கோலஸ் ஓட்டமெண்டி , லிசாண்ட்ரோ மார்டினெஸ் , நிக்கோலஸ் டாக்லியாஃபிகோ , மார்கோஸ் அகுனா , ஜுவான் போய்த்

நடுகளம் : லியாண்ட்ரோ பரேடெஸ் , கைடோ ரோட்ரிக்ஸ் , என்ஸோ பெர்னாண்டஸ் ,ரோட்ரிகோ டி பால், எக்ஸிகியெல் பலாசியோஸ் , அலெஜான்ட்ரோ கோம்ஸ் , அலெக்சிஸ் மேக் அலிஸ்டர்

முன்களம் : பாலோ டி பாலா , லயோனல் மெஸ்ஸி , ஏஞ்சல் டி மரியா , நிக்கோலஸ் கோன்சலஸ் , ஜோக்வின் கொரியா , லாடரோ மார்டினெஸ் ஜூலியன் அல்வாரெஸ்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.