வாரிசு டீசர் பற்றிய சுடச்சுட அப்டேட்; ரிலீஸ் தேதி இதுதான்!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்பபடம் ‘வாரிசு’. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக வரும் இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், இந்த படத்தில் விஜய் பாடி இருக்கும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது, படத்தின் டீசர் குறித்த தகவல் லீக்காகியுள்ளது. பொங்கல் விருந்தாக வர இருக்கும் வாரிசு படத்தின் டீசரை, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறதாம். ஏற்கனவே பல காட்சிகள் லீக்காகியிருப்பதால், இனி அப்படி நடக்கக்கூடாது என்பதில் கறாராக இருக்கும் வாரிசு படக்குழு, டீசர் ரிலீஸூக்கு பெரும் விளம்பரம் செய்யவும் முடிவெடுத்திருக்கிறாராம். அதற்கு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூவும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்தப் படம் கார்டூன் படத்தை விட மோசமாக இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கடுமையாக வசைபாடியிருந்தனர். அந்த கெட்டப்பெயரை மீட்டெடுக்கவும், மீண்டும் கோலிவுட் சக்கரவர்த்தியாக கோலோச்சவும் விரும்பும் விஜய், வாரிசு படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், லவ் என அனைத்து வித்தைகளிலும் புகுந்து விளையாடி இருக்கிறார். இந்த ஃபார்முலா தனக்கு நிச்சயம் வொர்க் அவுட்டாகும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறாராம்.

அதேநேரத்தில், வாரிசுக்கு போட்டியாக துணிவு படமும் பொங்கலுக்கு வர இருக்கிறது. அஜித் – விஜய் படங்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோடியாக தியேட்டரில் மோதிக் கொள்வதால் ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தாலும், படத்தின் கதை நன்றாக இல்லையென்றால் மொத்த வசூலும் பாதிக்கும் என்பதையும் கவனத்தில் கொண்டிருக்கிறது இரண்டு தரப்பும். அதற்கேற்ற வகையிலும் பிஸ்னஸ் டீல்களை முன்கூட்டியே மும்முரமாக முடித்துக் கொண்டிருக்கிறது வாரிசு மற்றும் துணிவு டீம். வாரிசு அப்டேட்டுகள் வெளியாவதால், துணிவு அப்டேட்டையும் கேட்க தொடங்கிவிட்டனர் அஜித் ரசிகர்கள். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.