பேறுகால மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகப்பேறு காலத்தில் கருவுற்ற பெண்கள் மற்றும் புதுமணத் தம்பதியருக்கு ஏற்படும் மன அழுத்தம் தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கம் அடையாறில் நடைபெற்றது. தற்போதைய சூழலில் சமூக ஊடகங்கள் மற்றும் நம்மை சுற்றி உள்ள சமூகத்தினர் வாயிலாக மகப்பேறு தொடர்பாக கேள்விப்படும் தகவல்கள் கருவுற்ற பெண்கள் மற்றும் முதல் மகப்பேறுக்காக காத்திருக்கும் தம்பதியர் மத்தியில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பெறுகாலத்தில் 52 விழுக்காடு பெண்கள் இது போன்ற மனஅழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். 

மேலும் இந்திய அளவில் 22 விழுக்காடு கர்ப்பிணிகள் இந்த மனஅழுத்தம் மற்றும் குழப்பம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என உலக சுகாதார அறிக்கை தெரிவிக்கிறது. ‘ மனமே கலங்காதே ‘ எனும் இந்த பயிலரங்கத்தை மின்ட் மருத்துவமனை மற்றும் எலிமெண்ட் H சைக்காலஜி சேவைகள் இணைந்து நடத்தியது. மணமான முதல் முறை கருவுற்றிருக்கும் பெண்கள் மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது? அதை குறைத்து உடல்நலத்தைப் பேணுவது மற்றும் பிரசவ காலங்களை எவ்வாறு சமாளிப்பது? போன்ற நுணுக்கங்கள் இந்த பயிலரங்கத்தில் தெளிவு படுத்தபட்டது. 

மின்ட் மருத்துவமனையின் இயக்குனரும், மகப்பேறு மற்றும் செயற்கை கருவூட்டல் மருத்துவ நிபுணருமான டாக்டர்.T.சரண்யா தனது பிரசவ கால சொந்த அனுபவங்களோடு அவற்றை எதிர்கொள்ளும் விதத்தை எடுத்துரைத்தார். இந்த பயிலரங்கத்தின் தலைமை விருந்தினர்களாக நங்கநல்லூர் BM மருத்துவமனையின் முதுநிலை மகப்பேறு மருத்துவர் திருமதி.டாக்டர். வசுந்தரா தியாகராஜன், பழம் பெரும் நடிகரான ஜெமினி கணேசனின் பேத்தியம் GG மருத்துவமனையின் இயக்குனரும் மகப்பேறு மருத்துவருமான டாக்டர். பிரியா செல்வராஜ், நடிகை ராதிகா சரத்குமார் அவர்களின் மகளும், லிட்டஸ்ட் லவ் நிறுவனத்தின் தொழில் முனைவருமான ரயானே மிதுன் மற்றும் மனநல சமூக ஆர்வலர், நடிகை கல்யாணி ரோகித் ஆகியோர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.