மனைவிக்கு இந்த காசில் நகை வாங்கும் சீமான்.. கிழித்தெடுத்த ராஜீவ் காந்தி

கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில்,

மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் ராஜீவ் காந்தி வைத்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சியில் பல தம்பிகளை சேர்த்ததை எண்ணி இதுவரை கவலை பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார். இந்த நிலையில் சீமானும், அவரது மனைவி கயல்விழியும் அண்மையில் கொடுத்த பேட்டியை ராஜீவ் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பேட்டியில் சீமான், டிவியில் நகை விளம்பரங்கள் வந்தால் என்னுடைய மனைவி அந்த நகைகளை வாங்கி தருமாறு கேட்பார் அதனால் உடனே வேற சேனலை மாற்றி விடுவேன் என கூறி நகைத்தார்.

அதை விமர்சித்திருக்கும் ராஜீவ் காந்தி, சீமான் அப்படி பேசுவது அதிகாரத்தின் உச்சம், தெரு தெருவாக பிச்சை எடுத்து தம்பிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அந்த காசில் மனைவிக்கு நகை வாங்கும் சீமானை இழிவான அரசியல்வாதியாகத்தான் நான் பார்க்கிறேன் என்று சாடியுள்ளார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தில் சீமான் உண்மையில் போராடினார் அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அவரது அரசியல் நிலைப்பாடும், கோமாளித்தனமும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

7 பேர் விடுதலை ஆனதற்கு யாரெல்லாம் காரணம் என்று சீமான் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கலைஞர் பெயர் இல்லை. பிராபகரனை தூக்கில் போடும் தீர்மானத்தை வழிய வந்து ஆதரவித்தவர் அப்போதைய சபாநாயகர் காளிமுத்து. ஆனால், காளிமுத்து தனது மாமனார் என்பதால் அவரை தமிழ் தேசிய தியாகியை போல சீமான் முன்னிறுத்துவது அபத்தத்தின் உச்சம் என ராஜிவ் காந்தி விமர்சித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.