உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள்: G20 மாநாட்டில் கொந்தளித்த ரிஷி சுனக்


இந்தோனேசியாவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை உக்ரைன் காரணமாக வெளுத்து வாங்கியுள்ளார்.

முடிவு கட்டுங்கள்

உக்ரைனை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கொந்தளித்த ரிஷி சுனக், இந்த காட்டுமிராண்டித்தனமான போருக்கு முடிவு கட்டுங்கள் எனவும் ஆவேசப்பட்டுள்ளார்.

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள்: G20 மாநாட்டில் கொந்தளித்த ரிஷி சுனக் | End This Barbaric War Rishi Confronts Sergei

@reuters

விளாடிமிர் புடின் நிர்வாகம் ரஷ்யாவை ஒரு புறந்தள்ளப்பட்ட நாடாக மாற்றியுள்ளது என துவங்கிய ரிஷி சுனக்,
எந்தவொரு நாடும் அண்டை நாடுகளை ஆக்கிரமிப்பது, பொதுமக்களைக் கொல்வது மற்றும் அணுசக்தி யுத்தத்தை அச்சுறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என பொட்டில் அறைந்தது போல சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உக்ரைன் விவகாரத்தில், பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்பதையும் ரிஷி சுனக் தெளிவுப்படுத்தியுள்ளார்.
ஆனால், ரிஷி சுனக் பேச்சுக்கு பதிலடி தந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்,
உக்ரைனில் மேற்கத்திய நாடுகளே ரஷ்யாவுக்கு எதிராக போரிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள்: G20 மாநாட்டில் கொந்தளித்த ரிஷி சுனக் | End This Barbaric War Rishi Confronts Sergei

@reuters

செர்ஜி லாவ்ரோவ் பதிலடி

மட்டுமின்றி, உக்ரைனின் ஏற்க முடியாத நிபந்தனைகளே முதன்மை காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதால் தானியங்கள் மற்றும் எரிசக்தி தொடர்பில் ரஷ்யா முக்கிய முடிவெடுக்க தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள்: G20 மாநாட்டில் கொந்தளித்த ரிஷி சுனக் | End This Barbaric War Rishi Confronts Sergei

@Simonwalker

ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பேச்சை கேட்டிருந்தால், போர் முடிவுக்கு வந்திருக்கும் எனவும் செர்ஜி லாவ்ரோவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உக்ரைன் நிர்வாகம் தங்களிடம் பேச மறுப்பதாகவும், ஒரு பொதுவான ஒப்பந்தத்திற்கு அவர்கள் வர மறுப்பதாகவும் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெலென்ஸ்கி தெரிவிக்கையில், உக்ரைன் ஒருபோதும் அமைதிக்கு ஈடாக அதன் இறையாண்மை, பிரதேசம் அல்லது சுதந்திரத்தை சமரசம் செய்துகொள்ளாது என்றார்.

பேரழிவை ஏற்படுத்தும் இந்த போரை ரஷ்யா உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தருணம் இது எனவும் ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.