”உங்க காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா? GST வரியை நிறுத்திவிடுவோம்” – மம்தா ஆவேசம்!

ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு மத்திய திட்டங்களின் கீழ் மேற்கு வங்க மாநிலத்துக்கு வர வேண்டிய பல நிலுவைத் தொகைகளை பாஜக தலைமையிலான அரசு முடக்கி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான பிர்சா முண்டாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். அப்போது பழங்குடியினர் நலத்திட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜி, “100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி கட்டாயம் தேவை.
இதுதொடர்பாக, ஓராண்டுக்கு முன், பிரதமரை நேரில் சென்று சந்தித்தேன். ஆனால் எந்த பயனும் இதுவரை இல்லை.. ‘’உங்கள் காலில் விழந்து, கெஞ்ச வேண்டுமா?” நாம் ஜனநாயகத்தில் தான் வாழ்கிறோமா? அல்லது இந்தியா ‘ஒரு கட்சி’ நாடாக மாறிவிட்டதா?
image
எங்களின் பாக்கியை எங்களிடம் கொடுங்கள். இது எங்கள் பணம். இல்லையெனில், ஜிஎஸ்டியை ரத்து செய்யுங்கள். 100 நாள் வேலைத் திட்டத்துக்கான எங்கள் நிலுவைத் தொகையை நீங்கள் உடனடியாக செலுத்த வேண்டும், இல்லையெனில் உங்கள் நாற்காலியை விட்டுவிடுங்கள்.
மாநிலத்துக்கு சேர வேண்டிய வரி தொகையை நீங்கள் நிறுத்தி வைத்து எங்களை நீங்கள் மிரட்டலாம். எங்களாலும் ஜிஎஸ்டி நிறுத்தி வைக்க முடியும். வங்காள மக்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்ந்தால், ஒரு நாள், அத்தகைய அரசியல்வாதிகள் பூஜ்ஜியமாகிவிடுவார்கள். பழங்குடியினரின் நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்பட்டு, அவர்களது நிலுவைத் தொகை நிறுத்தப்பட்டால், அவர்கள் தெருக்களில் இறங்கி தர்ணாவில் ஈடுபட வேண்டும்’’ என பழங்குடி மக்களிடத்தில் வலியுறுத்தினார்.
image
இதையும் படியுங்கள் – நவீன இந்தியாவின் சிற்பி.. கல்வி முதல் தொழில்துறை வரை வரலாறு பேசும் ’நேரு’வின் சாதனைகள்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.