சேலையில் வந்த மணமகன் தோழர்கள்… அன்னநடை போட்டு அதகளப்படுத்திய அமெரிக்கர்கள்!

ஆண்களுக்கு என வடிவமைக்கப்பட்ட உடைகளான, முழு கை சட்டை, ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றை பெண்கள் அணியத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் தாண்டியிருக்கும். ஆனால், இன்னும் பெண்கள் சார்ந்த உடைகளை ஆண்கள் மிக மலிவானதாக பார்க்கும் பார்வை மற்றும் கடந்த நூற்றாண்டோடு நின்றுவிட்டதாகவே தெரிகிறது. 

மாறாக, இந்த பாலின பேதங்களை அடித்து நொருக்கும் வகையில், அமெரிக்கவில் இந்தியாவை சேர்ந்த நண்பரின் திருமணத்திற்கு, மணமகனின் தோழர்கள் சேலை அணிந்து, பொட்டு வைத்து வந்த சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சிகாகோ நகரில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வின் வீடியோவை, அங்குள்ள திருமண வீடியோ எடுக்கும் ஸ்டூடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: ஸ்ப்ப்பா முடியலை… என்ன விடுடா… குட்டி யானையுடன் போராடும் இளைஞர்!

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில்,”மணமகனின் இரண்டு தோழர்கள் சேலையில் வந்த வித்தியாசமான திருமண நிகழ்வு” என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவில், அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு ஆண்களுக்கும், ஒரு இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சேலைக்கட்ட கற்றுக்கொடுகிறார். சேலையை அணிந்துகொண்டு, தங்களது இந்திய நண்பனின் திருமணத்திற்கு அவர்கள் தயாராகின்றனர். வண்மையான அந்த சேலையுடன், நெற்றியில் பொட்டையும் வைத்து தங்களை ஒரு பெண்ணாகவே மாற்றிக்கொண்டனர். 

சேலைக்கட்டியது மட்டுமின்றி, சிகாகோவின் முக்கிய சேலையில் அன்னநடைப்போட்டு நடந்துவந்தனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புதுமண தம்பதியினர், அவர்களின் அமெரிக்க நண்பர்களை சேலையில் பார்த்தவுடன் விழுந்து விழுந்து சிரித்தனர். மேலும், இறுதியாக அவர்களை கட்டியனைத்து மகிழ்ச்சியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். இந்த வீடியோ கடந்த அக். 27ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. 

வித்தியாசமான இந்த வீடியோ தற்போது பலரின் வரவேற்பையும் பெற்று, பாராட்டுகளை பெற்று வருகிறது. பாலின பேதங்களை இதுபோன்று போகிற போக்கில் தூக்கிப்போட்டுவிட்டு போகும் செயல்பாட்டை பலரும் வியந்து வருகின்றனர். இவர் இப்படிதான் உடை அணிய வேண்டும், இவர்கள் இந்த உடையை அணியக்கூடாது என்ற சமூகத்தில் எந்த அடிபணிதல்களும் இன்றி, தாங்கள் விரும்பிய உடையை போட்டுக்கொள்ளும் உரிமை அனைவருக்கும் இருக்க வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

தங்களது இந்திய நண்பர்களான புதுமண தம்பதியருக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்க, அவர்களின் இரண்டு அமெரிக்க நண்பர்களும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.    

மேலும் படிக்க | பள்ளி மாணவி செய்ய வேண்டிய செயலா இது; என்ன ஒரு ஆட்டம்: வீடியோ வைரல்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.