புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார்


புகைப்படங்களில் தமது கைகள் வெளிப்படையாக தெரிய முகம் காட்டுவது மறைந்த எலிசபெத் ராணியாருக்கு பிடிக்காத ஒன்று என பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.

வாளேந்தியபடி புகைப்படம்

வாளேந்தியபடி புகைப்படத்திற்கு முகம் காட்ட புகைப்படக் கலைஞர்கள் கோரிய நிலையிலேயே ராணியார் அதை நிராகரித்துள்ளார்.
கடந்த 2002ல் ஜூபிலி கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக 10 புகைப்படக் கலைஞர்கள் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார் | Queen Hated Hands Pictured Photographer Reveals

@getty

அதில், Rankin என்பவரே ராணியாரின் அந்த பிடிவாதத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
ராணியாருக்குரிய வாளேந்தியபடி புகைப்படம் ஒன்றிற்கு முகம் காட்ட புகைப்படக் கலைஞர்கள் கோரியுள்ளனர்.

அரண்மனையில் இருந்து தொலைபேசி

அதற்கு பதிலளித்த ராணியார், எனது கைகளை நான் விரும்புவதில்லை, அப்படியான புகைப்படம் வேண்டாம் என புன்னகை மாறாமல் பதிலளித்துள்ளார்.
ஆனால், Rankin பதிவு செய்த புகைப்படமே ராஜகுடும்பத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துப் போனதாகவும், அரண்மனையில் இருந்து தொலைபேசி ஊடாக இவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

புகைப்படத்தில் அந்த பகுதி தெரிய வேண்டாம்: கண்டிப்புடன் சொன்ன எலிசபெத் ராணியார் | Queen Hated Hands Pictured Photographer Reveals

மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்களுடன் சகஜமாக பழகிய ராணியார், அவர்கள் கூறியது போலவே புகைப்படங்களுக்கு முகம் காட்டியுள்ளார்.
Rankin கூறுகையில், வெறும் 5 நிமிடங்களில் தேவையான புகைப்படங்களை தாம் பதிவு செய்துவிட்டதால், ராணியாருடன் அதிகம் பேசும் வாய்ப்பு தமக்கு அமையவில்லை என்றார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.