போரில் உணவு, எரிபொருள் ஆகியவை ஆயுதங்களா? G20 மாநாட்டில் சீன ஜனாதிபதியின் கேள்வியால் வியப்பு


உக்ரைனுடனான போரில் உணவும், எரிபொருள்களும் தான் ஆயுதமாக பயன்படுத்த வேண்டுமா? என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஜி 20 உச்சி மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார்.


G20 உச்சி மாநாடு

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக தலைவர்கள் கூடியுள்ள ஜி 20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, சீனா,இந்தியா, பிரித்தானியா போன்ற பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை முதன்மை பேசு பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரில் உணவு, எரிபொருள் ஆகியவை ஆயுதங்களா? G20 மாநாட்டில் சீன ஜனாதிபதியின் கேள்வியால் வியப்பு | China Xi Jinping Warns Using Food Fuel As WeaponsKim Mogg / NationalWorld

உணவு பொருட்கள் ஆயுதமா?

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கையில் ஆரம்பம் முதலே சீனா மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளும் நடுநிலை வகித்து வருகின்றனர், இதனால் மேற்கத்திய நாடுகள் பலவும் சீனாவும், இந்தியாவும் ரஷ்யாவிற்கு சார்பாக அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஜி 20 உச்சி மாநாட்டில் பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், போர் நடவடிக்கையில் உணவையும், எரிபொருளையும் நாடுகள் ஆயுதமாக பயன்படுத்துவதா? இது சரியா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

அத்துடன் உணவு மற்றும் எரிபொருட்களை அரசியலாக்குதல் மற்றும் ஆயுதமாக்குதலை முற்றிலுமாக நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

போரில் உணவு, எரிபொருள் ஆகியவை ஆயுதங்களா? G20 மாநாட்டில் சீன ஜனாதிபதியின் கேள்வியால் வியப்பு | China Xi Jinping Warns Using Food Fuel As WeaponsAFP

சீன ஜனாதிபதியின் இந்த கேள்விகளால் பல உலக தலைவர்களும் பெரும் வியப்பை அடைந்துள்ளனர்.

அதே சமயம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கும் ஜி ஜின்பிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக வளர்ச்சிக்கு இந்தியா வேண்டும்

மாநாட்டில் தொடர்ந்து பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்தியா சுத்தமான எரிசக்தி மற்றும் சுத்தமான சுற்றுச்சூழல் என்பதில் தெளிவாக உள்ளது, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு என்பது உலக வளர்ச்சிக்கு முக்கியமானது.

போரில் உணவு, எரிபொருள் ஆகியவை ஆயுதங்களா? G20 மாநாட்டில் சீன ஜனாதிபதியின் கேள்வியால் வியப்பு | China Xi Jinping Warns Using Food Fuel As WeaponsAP

பொருளாதார தடைகளால் இந்தியாவிற்கு எரிசக்தி கிடைப்பதை தடுக்கும் எவ்வித நடவடிக்கையினையும் ஊக்குவிக்க கூடாது, ஆகவே பிரிவினையை தூர ஒதுக்கி அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பு ஆகியவையே இந்த தருணத்தின் தேவை ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.