COP 27: பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக விளங்கும் Coca-Cola & PepsiCo!

எகிப்தில் இந்த ஆண்டு COP27 காலநிலை உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. கிரக வெப்பமயமாதல் உமிழ்வைக் குறைப்பதற்கும், காலநிலை தாக்கங்களால் நாசமடைந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவியை அதிகரிப்பதற்கும் ஆன ஒரு ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட 200 நாடுகள் ஈடுபட உள்ளன. Coca-Cola நிறுவனம் COP27 உச்சிமாநாட்டின் ஸ்பான்சர்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தான் அதிக பிளாஸ்டிக் மாசுபாட்டை பரப்புகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘பிரேக் ஃப்ரீ ப்ளாஸ்டிக்’ என்ற உலகளாவிய பிராண்ட் தணிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோகோ கோலா ஐந்து ஆண்டுகளில் மிக மோசமான பிளாஸ்டிக் மாசுபடுத்தும் நிறுவனமாக மாறியுள்ளது என கூறப்பட்டுள்ளது. கோகோ கோலாவைத் தவிர, பெப்சிகோ மற்றும் நெஸ்லே ஆகியவையும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. உலகைத் தவிர, இந்தியாவைப் பற்றி குறிப்பிடுகையில், பெப்சிகோ இந்த முறை இந்தியாவில் அதிகபட்ச பிளாஸ்டிக் மாசுபாட்டைப் பரப்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில், PepsiCo தவிர, Wai Wai Noodles-maker CG Foods India Pvt Ltd மற்றும் Mentos, Alpenliebe மற்றும் Chupa Chups lollipops ஆகிய தயாரிப்புகளுக்கு பின்னால் உள்ள உணவு நிறுவனமான Parfetti Van Mael ஆகியவை பிளாஸ்டிக் மாசுபாட்டை ஏற்படுத்துவதில் முன்னணியில் உள்ளன. பெப்சிகோ நிறுவனம் இந்த ஆண்டு இந்தியாவில் அதிகபட்ச மாசுபாட்டைப் பரப்பியுள்ளது. இது தவிர, கடந்த இரண்டு ஆண்டுகளாக பால் உற்பத்தியாளர்களும் பிலாஸ்டிக் க்மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.இதில் 2021 ஆம் ஆண்டு கர்நாடகா பால் கூட்டமைப்பு முதலிடத்திலும், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் முதலிடத்திலும் இருந்தது.

பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுங்கள் என்று கிட்டத்தட்ட 11,000 உலகளாவிய அமைப்புகளின் கூட்டமைப்பு, 2022 பிராண்ட் தணிக்கை அறிக்கையை தொகுக்க 87 இடங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான தன்னார்வலர்களின் உதவியுடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் கழிவு சேகரிப்பை கண்காணித்ததாக கூறியுள்ளது. “உலகம் முழுவதும் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகளை பரப்பும் பெருநிறுவனங்கள்” என இந்நிறுவனம் சில நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது. 

மேலும் படிக்க | நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் பொருளாதார பயங்கரவாதம்: COP27 இல் ஈரான்

Coca Cola மற்றும் PepsiCo இரண்டும் COP27 மாநாட்டில் பங்கு பெற்றுள்ளன. இந்த அமைப்பு பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்கும் பிரச்சாரத்தையும் நடத்தி வருகிறது. 2022 செப்டம்பர் மாதத்தில் Cop-27 அமைப்பில், Coca-Cola கூட்டு சேர முடிவு செய்தபோது, ​​​​அந்த நேரத்தில் பெரும்பாலானோர் நிறுவனத்தை நோக்கி ப்ல கேள்விகளை எழுப்பினர். இப்போது Coca-Cola உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலும் இதுபோன்ற மாசுபடுத்தும் செயலை பெப்சி கம்பெனி செய்து வருகிறது.

மேலும் படிக்க | World Population: உலக மக்கள்தொகை இன்று 800 கோடியை எட்டியது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.