அட நம்புங்க…வெறும் ரூ. 59-க்கு அசத்தலான நோக்கியா போன்: பிளிப்கார்ட்டில் கோலாகலம்

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் தினமும் பல சலுகைகளும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்படுகின்றன. இன்று ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நோக்கியா வலுவான பேட்டரிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் பெற்றது. வாடிக்கையாளர்கள் நோக்கியாவின் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க விரும்பினால், இன்று சரியான வாய்ப்பு வந்துள்ளது. இன்று, Nokia C21 Plus போனுக்கு ஒரு பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது முழு சார்ஜில் மூன்று நாட்கள் நீடிக்கும். ரூ.12,000 மதிப்புள்ள இந்த போனை இன்று வெறும் ரூ.59-க்கு வாங்க முடியும். இவ்வளவு குறைவான விலையில் இந்த போனை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

பிளிப்கார்டில் Nokia C21 Plus: சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

Nokia C21 Plus இன் அறிமுக விலை ரூ.11,999 ஆகும். எனினும், பிளிப்கார்ட்டில் இந்த போன் ரூ.9,799க்கு கிடைக்கிறது. இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு இந்த தொலைபேசியில் வங்கி மற்றும் பரிமாற்ற சலுகையும் கிடைக்கிறது. இது தொலைபேசியின் விலையை கணிசமாகக் குறைக்கும்.

பிளிப்கார்டில் Nokia C21 Plus: வங்கிச் சலுகை

Nokia C21 Plus வாங்க, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 490 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.9,309 ஆக குறையும்.

பிளிப்கார்டில் Nokia C21 Plus: எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்

நோக்கியா சி21 பிளஸில் ரூ.9,250 மதிப்பிலான பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்ஃபோனை மாற்றிக் கொண்டால், இந்த தள்ளுபடியை பெற முடியும். எனினும் இந்த தள்ளுபடியை பெற வாடிக்கையாளர்கள் தாங்கள் மாற்றும் போனின் நிலை நன்றாக இருப்பதையும் போனின் மாடல் லேட்டஸ்ட் மாடலாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் ரூ.9,250 மதிப்பிலான முழு தள்ளுபடி கிடைக்கும். 

பிளிப்கார்ட்டில் நோக்கியா சி21 பிளஸ் போனில் கிடைக்கும் அனைத்து தள்ளுபடிகளையும் வாடிக்கைடாளர்கள் பெற முடிந்தால், வலுவான பேட்டரி கொண்ட இந்த அட்டகாசமான போனை வெரும் ரூ.59-க்கு வாங்கலாம். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.