வெறும் ரூ.395 ரூபாயில் 3 மாதத்திற்கான ரீசார்ஜ் பிளான்! ஜியோ அசத்தல்!

புது டெல்லி: தொலைத்தொடர்பு சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் வரும் நாட்களில் தங்களில் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தலாம் எனத் தகவல். இந்நிலையில், குறைந்த விலை மற்றும் நீண்ட நாட்களுக்கு செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்புடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கான செய்தி தான் இது. தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் வாடிக்கையாளர்களை மனதில் வைத்து மலிவான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளுடன் மேலும் பல நன்மைகள் உள்ளன. நீங்கள் தினமும் இணையத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால், அத்தகைய சூழ்நிலையில், ஜியோவின் இந்த திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த மலிவு விலை ரீசார்ஜ் திட்டத்தில் வேலிடிட்டி மூன்று மாதத்திற்கு கிடைக்கிறது. ஜியோவின் இந்த சிறந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை மற்றும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜியோவின் 395 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் விவரம்:

ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை 395 ரூபாய். நீங்கள் மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு, இணைய பயன்பாட்டிற்கான டேட்டாவையும் பெறுவீர்கள்.

இந்த ரூ.395 திட்டத்தில் மொத்தம் 6 ஜிபி இணைய டேட்டா கிடைக்கும். அதேநேரத்தில் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு வசதியை நீங்கள் பெற முடியாது. அதாவது திட்டத்தில் 84 நாட்களுக்கும் சேர்ந்து மொத்தமாக 6 ஜிபி டேட்டா தான் கிடைக்கும். உங்கள் வேலிடிட்டி முடியும் வரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல அதிவேக டேட்டா வரம்பு முடிந்ததும், இணைய வேகம் 64 Kbps ஆக செயல்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இந்த திட்டத்தை உங்கள் மொபைலில் ரீசார்ஜ் செய்த பிறகு, செய்தி அனுப்ப 1000 எஸ்எம்எஸ் வசதியையும் பெறுவீர்கள். இதன் வேலிடிட்டியும் மொத்தம் 84 நாட்களுக்கு கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த திட்டத்தில் பல வசதிகளும் உள்ளன.

ஜியோ டிவி, ஜியோ சினிமா இலவசம்:

இந்த ரூ.395 திட்டத்தின் கீழ், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோவின் பிற பயன்பாடுகளின் சந்தாவையும் பெறுவீர்கள். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் இணையத்தை அதிகம் பயன்படுத்தாமல், நீண்ட செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்புடன் மலிவு விலை திட்டத்தை விரும்பினால், ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.