இப்படி கேவலமான வேலையை செய்யாதீங்க : அம்மு அபிராமி ‛அலர்ட்'

விஜய் நடித்த பைரவா படத்தில் அறிமுகமானவர் அம்மு அபிராமி. அதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உட்பட பல படங்களில் நடித்ததோடு விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அதோடு இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் அம்மு அபிராமி தனது சம்பந்தப்பட்ட சில வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் யாரோ மர்ம நபர் தான் தொடங்கியுள்ள யூடியூப் சேனலில், அம்மு அபிராமி தனது சேனலில் பயன்படுத்தியுள்ள லோகோவை இணைத்து ஆன்லைன் மூலம் பண மோசடி செய்திருக்கிறார். அதாவது எங்களது சேனல் நடத்திய போட்டியில் உங்களுக்கு ஐபோன் பரிசு கிடைத்திருக்கிறது என்று நேயர் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி 7000 ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது. இப்படி 7000 ரூபாய் அனுப்பிய அந்த நபர் பின்னர் அம்மு அபிராமியின் சேனலில் கமெண்ட் பாக்சில் அது குறித்து தெரிவித்திருக்கிறார். அதன் பிறகுதான் தனது லோகோவை யாரோ காப்பி அடித்து புதிய சேனல் தொடங்கி, அதன் மூலம் பண மோசடி செய்திருப்பதை தெரிந்து கொண்டுள்ளார் அம்மு அபிராமி.

இதையடுத்து அவர், ரசிகர்களை உஷார்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தன்னுடைய யூடியூப் சேனலின் லோகோவை அப்படியே கிரியேட் பண்ணி யாரோ பேக் அக்கவுண்ட் தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் வின் பண்ணி உள்ளீர்கள் என்று அவர்களின் வாட்ஸ் அப் எண்ணை வாங்கி உங்களுக்கு கிப்ட் அனுப்புகிறேன். அதற்கு 5000 ரூபாய் ஆகும். டெலிவரிக்கு 1500 ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளார்கள். என்னுடைய யுடியூப் சேனலில் இருந்ததுடன் அப்படி சொல்கிறார்கள் என்று நினைத்து அந்த ரசிகரும் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளார். அதன் காரணமாகவே நான் அந்த அக்கவுண்டை பிளாக் பண்ணி விட்டேன். இதுபோன்ற பேக்கான மெசேஜ் வருகிறது என்றால் அது உண்மையானதா என்பதை ஆராயாமல் பணம் அனுப்பாதீர்கள். அவசரப்பட்டு இதுபோன்று பணத்தை அனுப்பிவிட்டு வருத்தப்படுவதில் எந்த லாபமும் இல்லை.

நான் என்று நினைத்து அந்த ரசிகர் பணம் அனுப்பியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்று என் பெயரில் யாரேனும் பணமோசடி செய்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டு வாருங்கள். என்ன ஏது என்று தெரியாமல் பணத்தை அனுப்பிவிட்டு தயவு செய்து ஏமாறாதீர்கள். தயவுசெய்து இப்படி கேவலமான வேலையை செய்யாதீங்க. அடுத்தவங்க காசை அடிக்காதீங்க.. மக்களும், என்ன ஏது என்று தெரியாமல் பணத்தை அனுப்பிடாதீங்க.. விழிப்பா இருங்க என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் அம்மு அபிராமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.